Tuesday, April 15, 2008

அலைப்பேசியும் .jar கோப்புகளும்

முன்பு போல் அலைப்பேசிகள் இனிமேலும் பேசமட்டுமல்லாது இன்ன பிற காரியங்களையும் கையடக்கமாய் செய்ய உதவும் அளவிற்குவந்துவிட்டன. இணையத்தை மேயமுடிகின்றது, மின்னஞ்சல் பொட்டியை பார்க்கமுடிகின்றது, மென்புத்தகங்களை படிக்கமுடிகின்றது அப்படியே இஷ்ட விளையாட்டுகளை இறக்கம் செய்து பல ஆட்டங்களும் ஆடமுடிகின்றது. முன்பெல்லாம் கணிணிகளில் மட்டுமே முடிந்த பயன்பாடுகளையெல்லாம் இப்போது உள்ளங்கையிலேயே செய்ய முடிகின்றன.

உங்கள் அலைபேசியையும் இது மாதிரி முழுவீச்சில் பயன்படுத்தலாம். என்ன கொஞ்சம் ஒசர ரகமான ஃபோனாய் உங்கள் போன் இருத்தல் வேண்டும். அதிக போன் மெமரி இருந்தால் நல்லது. மைக்ரோ SD மெமரி கார்டு வசதி உங்கள் போனில் இருந்தால் நீங்கள் கலக்கலாம் போங்க.

மேல் நான் சொன்ன கைப்பேசி மென்பொருள்களெல்லாம் இணையத்தில் நிறையவே இறக்கத்துக்கு கிடைக்கின்றன. பெரும்பாலும் இவை jar,jad வடிவில் கிடைக்கும். இம்மென்பொருள்களை உங்கள் கைப்பேசிக்கு கடத்தி நிறுவலாம்.(கைப்பேசியிலிருந்து கணிணிக்கு) கைப்பேசியில் ஒரு மென்பொருளை நிறுவ அதன் .jar கோப்பும் அல்லது .jad எனப்படும் இன்னொரு கோப்பும் உங்களுக்குத் தேவைப்படலாம்.

ஒருவேளை .jar மட்டுமே இருந்தால் அதிலிருந்து .jad கோப்பை எளிதாய் jadMaker எனும் இலவச மென்பொருள் வழி உருவாக்கலாம்.

இந்த கைப்பேசி மென்பொருள்களை உங்கள் கணிணியில் சோதனைக்காக ஓட்ட, சரிபார்க்க ஒரு Cell Phone Emulator வேண்டுமாயின் நீங்கள் சன் ஜாவாவின் இலவச Sun Java Wireless Toolkit-ஐ முயன்று பார்க்கலாம்.

இப்போது ஆப்பிள் ஐபோனுக்கே சாப்ட்வேர் டெவலப்மென்ட் கிட் கிடைக்கின்றது.

கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் கீழ்கண்ட சுட்டியில் அநேக ஈபுத்தகங்கள் கிடைக்கின்றன.(Registration Required)http://www.thinnai.info

கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் குரான் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.mobango.com

கைப்பேசியில் பயன்படுத்தும் வடிவில் தமிழில் பைபிள் கீழ்கண்ட சுட்டியில் கிடைக்கின்றது. (Registration Required)
http://www.christiansmobile.com

"பகவத்கீதையின் சாரம்" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Essence of Bagavathu Gita in Tamil pdf ebook Download. Right click and Save.Download