
இங்கு வருபவர்களில் பலரும் கணிணியையும் அலைபேசியையும் அக்குவேராய் ஆணிவேராய் பிரிப்பவர்கள் போலிருக்கின்றது. பலவாறாய் வினாக்கள் வருகின்றன. முடிந்தவரை பதில் மின்னஞ்சல் செய்கின்றேன்.
விண்டோஸ் செர்வர் 2008-ஐ ஆங்காங்கே விழா வைத்து வெளியிட்டு வருகின்றார்கள்.கூடவே SQL Server 2008 மற்றும் Visual Studio 2008-ஐயும் வெளியிடுகின்றார்கள்.HHH அதாவது "heroes happen here" இதுதான் இந்த முறை மைக்ரோசாப்டின் பஞ்ச் டையலாக். வாடிக்கையாளர்களை ஹீரோக்கள் ஆக்குகின்றார்களாம். இந்த மாதிரி கவர்ச்சியாய் மார்கெட்டிங் செய்தே கவர்ச்சியாய் மென்பொருள் செய்தே இதுவரைக்கும் தப்பிபிழைத்திருக்கிறது. கவர்ச்சிக்குத் தானே எங்கும் முதலிடம்.
விண்டோஸ் செர்வர் 2008-ஐ பொருத்தவரை
VMware-ஐ துரத்த ஹைப்பர்-வி(Hyper-V),
விண்டோவே இல்லாமல் விண்டோஸ் ஓட்ட Server Core,
மொத்த டிஸ்கையும் என்கிரிப்ட் செய்து பாதுகாக்க Bitlocker,
எளிய ஸ்கிரிப்டிங்காக PowerShell
-ன்னு பல சமாச்சாரங்கள் உள்ளது. மற்றபடி மேலே படத்தில் நீங்கள் பார்ப்பது போல பிரம்மாண்டமாய் நம்ம ஷங்கரின் ரோபோ ஒன்றை போட்டு பயமுறுத்தும் அளவுக்கு அப்படி அதில் என்ன இருக்கின்றதுவென தெரியவில்லை. தேடிப் பார்க்கவேண்டும்.

Very very OLD MS-DOS based Game (DAVE).
For me, My system is not supporting this old game DAVE.
The screen is splitted.. and graphics is not supporting for my machine.
What to do? How can I play this MS-DOS based old DAVE game in my machine?
Can you please tell me the idea to get rid of this problem.
Thanks
by
TamilNenjam
ரொம்ப நன்றி தமிழ்நெஞ்சம்!!. பழைய நினைவுகளுக்கு கொண்டுபோய்விட்டீர்கள். :) அந்தகாலத்தில் (?) பாழாப்போன கணிணி லேப்-க்கு போனால் எல்லா கணிணியிலும் இந்த "டேவ்" தான் ஓடிக்கொண்டிருக்கும்.
துரதிஷ்டவசமாக என் இரண்டு windows XP கணிணியிலும் இந்த டேவ் நன்றாக வேலை செய்கின்றது.அதனால் உங்கள் தொல்லையை இங்கே என்னால் கொணன்று சோதிக்க இயலவில்லை.
ஆனாலும் ஒன்றை முயன்றுபார்க்கலாம்.
Right click Dave.exe, and choose "Properties".
Click the "Program" tab, and check the "Maximized" checkbox in the Run box.
Click the "Screen" tab, and click on the "Full-screen" radio button.
Click the "Compatibility" tab, and check the box beside "Run in compatibility mode", and choose "Windows 95" in the dropbox. Check the three other boxes:
"Run in 256 colors"
"Run in 640x480 screen resolution" ,
and "Disable visual themes".
Click "Apply" and then click "OK" to close the box.
இப்போ மூச்சை பிடித்துக்கொண்டு ஓட்டி பாருங்கள்.
Best of luck.
