
ஆனால் நிஜ கணவன்கள், நிஜ மனைவிகளின் ரகசிய விடியோக்கள் ரேப்பிட்ஷேர் சுட்டிகளாக வரும் போது தான் ரொம்ப வருத்தமாய் இருக்கின்றது. அதுவும் இந்திய தம்பதிகளின் அந்தரங்க விளையாட்டுக்கள். பெரும்பாலான வீடியோக்களில் அந்த மனைவியோ அல்லது அந்த பெண் நண்பியோ கேமராவை அணைக்க சண்டைபோடுவாள். அதையும் மீறி அவன் திமிராய் கேமராவை ஸ்டெடியாய் செட் செய்து வைத்திருப்பான். அல்லது அந்த ஒளிப்பட பெட்டியை மறைத்து வைத்திருப்பான். ஆண்கள் மேல் வெறுப்பையே வரவைக்கும் வக்கிர நாய்கள் அவன்கள். மற்றும் சில பெண்கள் அப்பாவியாய் விடயம் தெரியாது இருப்பர். அந்த ஆண் நாய் முடிந்த வரை தன் முகத்தை மறைக்க முயன்றுகொண்டே இருப்பான். தன் கூத்துக்களை வீடியோவில் பார்க்கும் சில நிமிட அற்ப சுகத்துக்காக ஆண் மிருகம் செய்யும் அந்த ஆபாச ரெக்கார்டிங் இணையத்தில் ஒரு முறை வந்து விட்டால். பன்னிக்குட்டி மாதிரி. தடுக்கவே முடியாது.சரமாரியாய் பரவிக்கொண்டே இருக்கும். இந்த இளம் தம்பதிகள் சுதந்திரமாய் வெளிஉலகம் வருவது எப்படி?.
ஏதோ ஒன்றோ இரண்டோ முறை ஞானி போல் இண்டர்நெட் சாட்டில் தன்னிடம் பேசிய , சில ஆறுதல் வார்த்தைகள் பேசிய அந்த தொலைதூர ஆணை நம்பி தன்னை முழுசாய் வெப்கேமில் காண்பிக்க அவள் மனம் வருகின்றது. உஷாராய் இவன் ரெக்கார்ட் செய்து அந்த காணொளொயை இணையேற்றம் செய்து விடுகின்றான் அவள் நம்பிக்கையில் மண்ணை வாரி போட்டு விட்டு. இவள் மானமும் இணையக் கப்பல் ஏறிவிடுகின்றது.
எந்த குடும்ப பெண்ணும் அதுவும் நம் நாட்டு குடும்ப பெண்கள் கணவன் அல்லது தனது பாய்பிரண்டு மகிழ்ச்சியாய் இருக்க எது வேண்டுமானாலும் செய்வாள், எதைவேண்டுமானாலும் அனுமதிப்பாள்- ஆனால் தன் உடம்பு இணையத்தில் காட்டிபொருளாய் இருக்க ஆசைப்படுவாளா என்பது சந்தேகமே.
ஸோ... இந்த நவீன உலகில் சில படுக்கையறை ஒழுக்கங்களை உங்கள் நலனுக்காக வைத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. வெப்கேம், கேமெரா, கேமரா உள்ள செல்போன் இதையெல்லாம் படுக்கையறைக்கு வெளியே மட்டும் கண்டிஷனாய் வைத்திருங்கள்.
மீறி வெப்கேமோ, கேமரா உள்ள செல்போனோ, அல்லது வேறெதாவதொரு கேமராவோ படுக்கையறைக்கு கொண்டுவரும் கணவன் எவனானாலும் அவனை செருப்பால் அடியுங்கள். அப்படியொரு ரசனை அவனுக்கு தேவையில்லை.
நம் பெண்கள் இதற்கெல்லாம் சளைத்தவர்களில்லை என்ற நம்பிக்கை இருக்கின்றது. செய்திகள் வரலாம்.
ஸாரி...நண்பர்களே! இப்படி ஒரு dirty பதிவு! :)
