
எங்கு போகின்றாள் இவள்? மாலை முதல் நள்ளிரவுதாண்டியும் அப்படி எங்கே அவள்?
போன வாரம் கிளைமாக்ஸ் நடந்தது.
வெறும்(!) 230 டாலர்கள் தான். ஆன்லைனில் ஆர்டர்பண்ணியிருந்த LandAirSea GPS Tracking Key வந்துவிட்டிருந்தது. சிறுசா தீப்பட்டிமாதிரி. ஒரு USB கொக்கியும் இருந்தது. சில பேட்டரிகள் நாம் போடவேண்டும்.பரிமளாவுக்குத் தெரியாமல் அவள் டொயோட்டா கேம்ரி காரின் அடியில் அந்த டிராக்கிங் கீயை நச்சென ஒட்டவைத்தேன். அதிலிருந்த காந்தம் பரிமளாவின் காரை கெட்டியாகப் பிடித்துக்கொண்டது.
இனி இந்த கார் எங்கெல்லாம் போகுமோ அதெல்லாம் எனக்கு சந்து சந்தாக தெரிந்துவிடும். எவ்வளவு வேகமாக அவள் காரை ஓட்டினாள் (அவள் ஒரு பறக்கும் பாவை) எங்கெல்லாம் எவ்வளவு நேரம் அவள் நின்றாள் எல்லாம் இந்த கீ நோட் செய்து வைத்துக்கொள்ளும். அடுத்த நாள் அந்த Tracking Key-யை எடுத்து வந்து எனது கணிணியில் செருகி பார்த்தால் அத்தனையும் மேப் போட்டு துல்லிபமாய் எனக்கு காட்டிவிடும்.
இதுமாதிரி யாரை வேண்டுமானாலும் நீங்கள் கண்காணிக்கலாமாம் அதுவும் உலக அளவில். அதனால் இனிமேல் "ஒருமாதியான" இடங்களுக்கு போவதாய் இருந்தால் செல்லும்முன் காரை முழுசா சோதனை போட முடிவெடுத்திருக்கின்றேன்.
இன்றைய காலத்தில் தொழில்நுட்பத்தில் நீங்கள் ஆர்வமுள்ளவராய் இல்லாதவராயினும் நிகழ் கால தொழில்நுட்ப விசயங்களை கண்டிப்பாய் தெரிந்திருக்கவேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம்.எது தொழில் நுட்பத்தால் முடியும் எது முடியாது இதெல்லாம் சகலோர்க்கும் தெரிந்திருக்க வேண்டிய நிலை. ஒன்றும் தெரியாத அப்பாவியாய் இருந்தால் தெரிந்தவன் உங்களை கொள்ளை கொண்டு போய்விடுவான்.
சரி பரிமளாவின் கதையை நான் இப்போ எப்படி முடிக்கறது? ஒவ்வொரு மொழி பட இயக்குனர்களும் ஒவ்வொரு விதமாய் முடித்திருப்பார்கள். இல்லையா?
மேலும் அறிய
http://www.trackingkey.com
டிஸ்கிளைமர்: எனது பதிவுகளில் வரும் பக்கத்து வீட்டு பரிமளா முதல் பொன்னம்மா பாட்டி வரை அத்தனைபேரும் கற்பனை கதாபாத்திரங்களே Just In Case :)
