
"திரு பிகேபி அவர்களே, உங்கள் பதிவுகள் பலருக்கு உபயோகமாய் இருக்கும். நான் கடலூரில் வெளியிடும் ஒரு விளம்பர இதழில் தங்களின் FREE HIDE FOLDER குறித்து செய்தி (பக்கம் 2ல்) வெளியிட்டுள்ளேன். கவனிக்கவும் -நன்றி, சிவா
http://tamilnadu-freead.blogspot.com
http://shiva-telecom.blogspot.com"
மகிழ்ச்சியாய் இருந்தது. எங்கோ ஒரு மூலையிலிருந்து எழுதப்படும் ஏதோ ஒரு விஷயம் எங்கெல்லாம் எதிரொலிக்கின்றதென பாருங்கள். அவரது "கடலூர் பார்வை" எனும் அந்த விளம்பர இதழை சிறிது நோட்டமிட்டபோது சில தகவல்களை எல்லாருக்கும் பொத்தாம் பொதுவாய் சொல்லலாம் போல் தோன்றியது.
அதில் முக்கியமானது Internet Presence-ஐ பற்றியது.அதாவது அவரவர் இணைய விலாசம். பிரபல தமிழிலக்கிய எழுத்தாளர்கள் முதல் சாதாரண தியாகராய நகர் நகைக்கடை வரை தங்கள் இணைய விலாசத்தை பிரசித்திப்படுத்திக் கொண்டு வரும் நேரம் இது.
இந்த நேரத்தில் நண்பர் இத்தனை சிரமெமெடுத்து வெளியிடும் தனது காகித இதழில் ஒரு blogspot.com முகவரியை தனது இணைய விலாசமாக அறிவித்திருப்பது கஷ்டமாயிருந்தது. நண்பரே உடனே ஒரு .com-மோ அல்லது .in பெயரோ இணையத்தில் பதிவு செய்யுங்கள். நீங்கள் நினைப்பது போல் ரொம்ப செலவெல்லாம் ஆகாது. ஆனால் It will pay you back in long run.
தயவுசெய்து பெயர் பதிவு செய்யும் போது நண்பர் தமிழ்நெஞ்சம் செய்தது போல் பெயர் தெரிவு செய்யவேண்டாம். அவரது முகவரி Tamil2000-ஆ Thamiz2000-ஆ Tamiz2000-ஆ அல்லது Thamil2000-ஆ என்று இன்றுவரை எனக்கு தெரியாது. ரொம்ப குழப்பம். ரொம்ப தேட வேண்டிவரும். எழுத்து பிழை உங்கள் தளம் தேடிவருவோரை வேறெங்காவது இழுத்துச் செல்லும்.எளிதாக ஒரு பெயர் வைங்க. Shivatelecom.com-இன்னும் பதிவுசெய்ய இருக்கே. யாராவது அப்பெயரை எடுத்துவிடும் முன் முந்திக்கொள்ளுங்கள்.
நண்பர் தமிழ் நெஞ்சம் மன்னிச்சுக்கோங்க.உங்கள் பெயரை இங்கு இழுக்கவேண்டி வந்தது. :)
அதுபோல் உங்கள் தளமுகவரியில் இப்போது உள்ள குறியான - (அதாங்க ஹைபன்)-ஐ தயவுசெய்து தவிர்க்கவும். பின் ஒருகாலத்தில் உங்கள் முகவரியை பிறருக்கு வாய்மொழியாய் சொல்லும் போது ரொம்ப கஷ்டமாயிருக்கும்.
நன்கு வளர்ந்த நிறுவனங்கள், பிரபலங்கள் கூட இன்னும் Yahoo mail, Gmail, Rediff mail பயன்படுத்துவது சோகமான விஷயம்.
suntvarattaiarangam@yahoo.com -இப்படி ஒரு நீண்ட முகவரி வைத்தால் ஸ்பெல்லிங் தவறில்லாமல் இந்த மின்னஞ்சல் முகவரியை எப்படி தட்டமுடியும்?
சன்டிவி நீங்கள் கேட்ட பாடல் nkp@sunnetwork.in- That is cute. அப்படி ஒரு நிகழ்ச்சி இப்போ இருக்குதா என்ன?
உதாரணத்திற்கு எனது முகவரியான admin@pkp.in-ஐ Gmail வழி பயன்படுத்தவும் வழி இருக்கின்றது. அதுதான் Gmail for Organizations. இதனால் பயன்:எனது மின்முகவரியோ எனது தளம்பெயர்சொல்லும், ஆனால் அதேவேளை நான் பயன்படுத்துவதோ என் அபிமான ஜிமெயில் மென்பொருளாய் இருக்கும்.
என்னைபோல் விளையாட்டாய் இணையத்தில் புகுவோர் ரொம்ப சிரத்தை எடுக்க தேவையில்லை.
ஆனால் உங்களைப்போல் வியாபாரரீதியில் இணையத்தில் புகும் போது இதெல்லாம் (Branding) ரொம்ப முக்கியம்.
எல்லாம் நண்பர் சிவாவுக்காக எழுதினேன். புதிதாக சாதிக்க கிளம்பியிருக்கிறாரே. பட்டையை கிளப்புங்க சிவா.
