
ஆனால் உங்களின் கெனான் ஒளிப்படக்கருவி மின்னி மின்னி உள்வாங்கிய உங்கள் குழந்தையின் புன்னகை படங்களை உங்களின் ஸ்கிரீன்சேவராய் உங்கள் கணிணியில் ஓட விடுவது எப்படி?
கூகிள் வழங்கும் இலவச மென்பொருளான பிக்காசா உங்களிடம் இருந்தால் அது இதுமாதிரி தெரிவுசெய்யப்பட்ட படங்களை உங்கள் கணிணியில் ஸ்கிரீன்சேவராய் ஓட விட வசதியளிக்கின்றது. ஆனால் இன்னும் கொஞ்சம் அதிகமாய் வசதி வாய்ப்புகளோடு .scr வடிவில் உங்கள் குடும்ப படங்களை ஸ்கிரீன்சேவராக்க இதோ ஒரு இலவச மென்பொருள். அதன் பெயர் PhotoMeister. இதனைபயன் படுத்தி நீங்கள் உருவாக்கும் Screensaver-க்கு பலவித எஃபெக்ட்கள் கொடுக்கலாம், போட்டோ தலைப்புகள் போட்டுக்கொள்ளலாம், பிண்ணணியில் இசையை ஓட விடலாம், இப்படி பல கிமிக்ஸ்கள் செய்யலாம். கணிணியும் உங்கள் குதுகல குடும்பத்தை எதிரொளித்துக்கொண்டே இருக்கும்.
Product Home Page
http://www.photomeister.com
Direct Download Link
http://download2.paessler.com/download/photomeister.zip
