Monday, April 28, 2008

மீடியா பிளயரில் பாடல்வரிகள்

Eminem, Enrique, Eagles என்று ஆங்கில MP3 பாடல்களை அதிகமாய் கேட்கும் ரகமா நீங்கள்? உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. இனிமேல் இந்தப் பாடல்களை நீங்கள் உங்கள் கணிணியில் கேட்கும் போது கூடவே அந்த பாடல்களின் வரிகளையும் (Lyrics) காணலாம். அதாவது விண்டோஸ் மீடியா பிளயரானது தன் திரையில் அந்த பாடல் வரிகளை உங்களுக்கு காண்பிக்குமாறு செய்யலாம். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் கீழ் கண்ட சுட்டியில் சென்று Lyrics Plugin for Windows Media Player அல்லது Lyrics Plugin for Winamp-ஐ இறக்கம் செய்து உங்கள் கணிணியில் நிறுவினால் போதும். நீங்கள் ஒரு பாடலை ஓட விட்டால் அது தானாகவே அப்பாடலை புரிந்து கொண்டு அதற்கான வரிகளை இணையத்திலிருந்து இறக்கம் செய்து உங்களுக்கு காட்டி விடும். விருப்பப்பாடல்களின் வரிகளை இனி வலைதளங்களில் தேட வேண்டியதில்லை. உங்கள் மீடியாபிளயரின் திரையிலேயே பார்க்கலாம். என்ன நம்ம ஊரு பாடல்களையும் இது மாதிரி வரிகளோடு கேட்க இன்னும் கொஞ்சம் காலங்களாகும்.
http://www.lyricsplugin.com

நண்பர் RSK கேட்டிருந்தார்.
Hi pkp,
I need some nokia n70 sofwares for my mobile.When I went into search I found so many softwares , but I cannot trust them. (due to virus ) can u tell me some of the softwares for my n70 mobile.bye.
Smiles frm,
RSK.


நீங்கள் நோக்கியாவின் MOSH தளம் போயிருக்கின்றீர்களா? போய் பாருங்கள். பல அலைப்பேசி சம்பந்த பட்ட மென்பொருள்களை இங்கே நீங்கள் இலவசமாக இறக்கம் செய்து கொள்ளலாம். அருமையான தளம். அதன் சுட்டி இதோ.
http://mosh.nokia.com

இது நோக்கியாவின் சொந்த இணைய தளம். அவர்கள் வைரஸ் பற்றி சொல்லும் போது "All uploaded content and applications will be automatically screened for viruses before they are made available for download on MOSH. We cannot guarantee that all uploaded content is free from viruses, so please use good judgement when downloading"
என்கின்றார்கள்.இனி உங்கள் விருப்பம் :)

நிற்க.

நியூயார்க் மாகாணத்தில் வெச்செஸ்டர் கவுண்டியையும் ராக்லேண்ட் கவுண்டியையும் இணைக்கும் அந்த நீண்ட பாலத்தின் பெயர் டேப்பன்ஸீ. இது வழியாய் நீங்கள் ஹட்சன் ஆற்றைக் கடந்தால் ஒவ்வொரு சீசனிலும் அந்த மலைகள் ஒவ்வொரு நிறங்களில் உங்களுக்கு கண்ணுக்கினிய காட்சிகள் தரும். குளிர்காலத்தில் பனிக்கட்டி போல் சில்லுனு கிடக்கும் இந்த ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டோர் பலர், காரோடு சேர்ந்து குதித்தும் தற்கொலை செய்து கொண்டோர் பற்றி கேள்விபட்டிருக்கின்றேன். அதில் சமீபத்தில் சென்னையிலிருந்து வந்திருந்த ஒரு கணிணி மென்பொருள் வல்லுனரும் அடக்கம் என்பது மனதுக்கு மிகுந்த கஷ்டமாய் இருந்தது.வேலை கிடைக்காமல் கஷ்டபட்டதாக அந்த செய்தி சொல்லிற்று. இத்தனை வயதுவரை எத்தனை தடைகளைத் தாண்டி இவ்வளவு தூரம் வந்து கடைசியில் தற்கொலைசெய்யும் அளவுக்கு அந்த இளைஞர் கஷ்டப்பட்டிருக்கின்றார்.இன்றைய மோசமான வேலைவாய்ப்பு நிலவரங்கள், மந்தமான பொருளாதாரம், டாலரின் இறங்குமுகம், பெட்ரோல் மற்றும் அரிசி விலையின் ஏறுமுகம், கடுமையான போட்டிகள் இவைகள் தான் காரணமோ என்னமோ?

சட்டப்படி அமெரிக்காவில் இருக்கின்றீர்கள், கணிணித் துறையில் வேலை தேடிக் கொண்டிருக்கின்றீர்கள், உங்களுக்கு ஆட்சேபணையில்லை எனில் எனக்கும் தெரிவியுங்கள். தகுந்த வேலை உங்களுக்கு கிடைக்க என்னாலான உதவியை செய்ய நான் எப்போதும் தயார்.

தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வுகளுக்கு உதவும் தி ராமன்ஸ் ஜெனரல் நாலெட்ஞ் பொது அறிவு புத்தகம் இங்கே ஆங்கிலத்தில் சிறு மென் புத்தகமாக. The Ramans Books General Knowledge in English for TNPSC (Tamil Nadu Public Service Commission) Exams pdf ebook Download. Right click and Save.Download