
போனை என்னிடம் கொடுத்தான்.மறுமுனையில் பரிமளா.
"பிகேபி யூ நோ வாட். ஐம் இன் எ டீப் ஷிட் மேன்" என்றாள்.
என்ன சொல்கின்றாள் இவள்.இவளுக்கு என்ன ஆயிற்று.
தொடர்ந்தாள்.
"ஒகே..லிசன்...பிகேபி என்ன ஆச்சுன்னா..பொதுவா இந்தியா வந்தா நான் மெயிலே செக் பண்ணமாட்டேன்.நேற்றைக்கு நேகா வீட்டில் மெயில் செக்பண்ண சான்ஸ் கெடச்சது."Fraud Prevention Alert From Your HSBC Credit Card" -னு ஒரு மெயில் வந்திருந்தது. பயந்து போய் அவங்க கொடுத்திருந்த டோல் ஃபிரி நம்பர்ல கால் செஞ்சா காலே போகமாட்டேங்குது. டிங் டிங் அவ்ளோதான். கட் ஆயிடுது. இப்போ நான் என்னப் பண்ணறது?" பதட்டமாய் கேட்டாள் பரிமளா.
"ஹே! பர்ஸ்ட் ரிலாக்ஸ்ப்பா" -ன்னு சொன்ன நான் அந்த இலவச அழைப்பு உதவி தொலைப்பேசி எண்களை கேட்டேன்.
"18004199782,18317597070" -னு சொன்னாள்.
இந்தியாவிலிருந்து அமெரிக்க 1800 எண்களை குப்பிடும்போது 1-றை எடுத்து விட்டு அழைக்க வேண்டுமென கூறினேன்.
18004199782-க்கு பதிலாக 008004199782
18317597070-க்கு பதிலாக 008317597070
சும்மாவாலும் எண்களை தட்டிப் பார்த்தவளுக்கு மறுமுனையில் மணியோசை கேட்டிருக்கும் போலும்.
"கால் யு பேக்"-னு சொல்லிவிட்டு பட்டென வைத்துவிட்டாள் படு பாவி.
இங்கே கோபால் இன்னும் என்னை முறைத்துக்கொண்டே இருந்தான்.
ஐந்தே நிமிடத்தில் மீண்டும் அவன் கைப்பேசி இசைக்க
"நீயே எடு" என்றான்.எடுத்தேன்.
பரிமளாதான்.
"பிகேபி, அந்த ஸ்டுப்பிட் என் கிரெடிட் கார்டு compromised ஆகிட்டுதுனு சொன்னான் அப்படீன்னா..?"
"அடடா..அப்படியாச் சொன்னான் compromised-னா உன் கிரெடிட் கார்டு டீடெய்ஸ் எல்லாம் எப்படியோ திருட்டு போயிட்டுதுனு அர்த்தம். யாராவது மிஸ்யூஸ் பண்ண பார்த்திருப்பாங்க போல" என்றேன்
"அப்படித் தான் தெரியுது பிகேபி. அவன் சொன்னது எதுவும் எனக்கு ஒழுங்கா கேக்கல. நியூயார்க் வந்து HSBC-க்கு திரும்பவும் கால் பண்ணணும்.அது வரை என் கிரெடிட் கார்டை பிளாக் பண்ணி வைத்திருப்பதாக அவன் சொன்னான்" என்றாள்.
"குட் பார் யூ" என்றேன்.
"இனிமே என்ன ஆகும்"
"ஒண்ணும் ஆகாது.இங்க வந்ததும் கால் செய்து Recent transaction-எல்லாம் கேட்டு உன் பர்சேஸ்களை மட்டும் கன்பார்ம் பண்ணிடு.மிச்சத்தை அப்புறம் பார்க்கலாம்" என்றேன்.
"ச்சே.. இப்போதைக்கு நான் இந்த கிரெடிட்கார்டை இங்கே யூஸ் செய்யமுடியாது இல்லையா"
"ஆமாம்" என்றேன்."ஆனா உன் Debit card-யை இந்திய ஏடிஎம்-களில் பயன்படுத்தலாம்" என்றேன்
"வாட்!!"
"ஆமா உன் அமெரிக்க பாங்க் அக்கவுண்டிலிருக்கும் பணத்தை இந்திய ரூபாயாக எடுத்துக்கலாம். ஆனா என்ன கொஞ்சம் பீஸ் எடுத்துப்பார்கள்.எக்சேஞ்ரேட் கொஞ்சம் கம்மியா இருக்கும்" என்றேன்.
"தட்ஸ் ஓகே.ஒரு குட் நியூஸ் சொன்ன.இப்பத்தான் என் உயிர் வந்தது பிகேபி" என்றாள்.
பேசி முடிந்ததும் கோபால் என்னிடம் கேட்டான். "ஏண்டா அதெல்லாம் என்கிட்ட கேட்க்காமல் உன்கிட்ட கேட்டா, அதுவும் என் செல்போன்லயே கூப்பிட்டுட்டு"
எனக்கு பதில் எதுவும் சொல்லத்தெரியவில்லை.
கொஞ்சநேரம் யோசித்துக்கொண்டிருந்தான்.
பின் தீர்மானமாகச் சொன்னான் "நானும் Blog எழுதப்போறேன்"
