
கோபால் அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்திருந்தான்.
"ஏண்டா லேட்டு"
"JFK வரை போயிருந்தேன்,பரிமளாவை டிராப் பண்ண"
"ஓ"
சற்று நேரம் அமைதி. கோபால் முகத்தை பார்த்தேன். அவன் முகத்தில் வழக்கமான களையில்லை.
லேப்டாப்பில் மூழ்கியிருந்தான்.
"இன்னைக்கு ஏதாவது பதிவு போட்டிருக்கியா?" இது கோபால்.
"இல்லை"
"ஏன்,டாபிக் எதுவும் கிடைக்கலையா?" கிண்டலாகக் கேட்டான்.
சிரித்தேன்.
"பிரிவொன்றை சந்தித்தேன் முதல் முறை நேற்று" பிரசாந்தின் பாடல் என நினைக்கின்றேன்.
லேப்டாப்பில் ஓட விட்டு கூடவே முனுமுனுத்துக்கொண்டேயிருந்தான்.
"ஒரே டென்சனா இருக்குடா" என்றான்.
"ஏன்"
"ஒண்ணும் இல்லை"-ன்னு இழுத்தான் பின் "பரி ஒழுங்கா பத்ரமா டிரிவான்ட்ரம் போய் சேரனுமேன்னு தான்"என்றான்.
உடனே நான் "ஆமாடா நீ சொல்றதும் சரிதான்.ஒரு மாசத்துக்கு முன்னாடி தான் காங்கோல ஒரு பிளைட் கிராஷ் ஆகி...."
"கொஞ்சம் வாய மூடுறியா" என்றான்.
"ஓ..ஓ.க்கே"
"டேய் பெரிசு பெரிசா எழுதுறியே.இந்த பிளைட்டுங்கள் ஒழுங்கா போய் சேந்துதானு பாக்க ஏதாவது சாப்ட்வேர் இருக்குதான்னு பார்த்து சொல்லு" என்றான் கோபால்.
"ஓ இருக்கே"
விவேக் பாணியில் "சிஎன்என் பார்த்துக்கிட்டே இரு பிரேக்கிங் நியூஸ் போடுவார்கள்" என்றேன்.
"ஷடப்" என்றான்.
அப்புறம் http://flightaware.com தளத்தை அறிமுகப்படுத்தி வைத்தேன்.
பொதுவாக JFK போன்ற விமானநிலையங்களில் விமானத்தில் ஏறி அமர்ந்தால் அது ஒரு ஒரு மணிநேரமாக விமான தளத்தையே சுற்றி சுற்றி வரும். ஒரு நீண்ட வரிசையின் முடிவில் ஒரு மணிநேரத்துக்கப்புறம் தான் நம் விமானம் பறக்கிறதற்கு வாய்ப்பு கிடைக்கும். அவ்வளவு கூட்டம். இந்த இணைய தளத்தில் விமான சேவை நிறுவனம் மற்றும் அந்த குறிப்பிட்ட விமான எண் கொடுத்தால் போதும், விமானம் எப்போது புறப்பட்டது, எப்போது அது டேக் ஆப் ஆனது, இப்போது பூமியிலிருந்து எவ்வளவு உயரத்தில் அது பறந்து கொண்டிருக்கின்றது? புறப்பட்ட இடத்திலிருந்து அது எவ்வளவு தூரம் போயிருக்கின்றது? இன்னும் எவ்வளவு தூரம் போகவேண்டும்? இன்னும் எவ்வளவு நேரமாகும்? இதெல்லாம் நிமிடத்துக்கு நிமிடம் அப்டேட் செய்து சொல்கின்றார்கள்.
விமானம் தற்போது பறந்து கொண்டிருக்கும் இடத்தை அழகாய் ஒரு மேப்பும் வரைந்து காட்டுகின்றார்கள்.
குவைத் ஏர்வேஸ்-ன்னு டைப்பி விமான எண்ணையும் கொடுத்தான் கோபால். பட்டென அது புள்ளிவிவரங்களை சொல்லிற்று.
கோபாலுக்கு பயங்கர குஷி.ஏதோ பரியே தன் பக்கத்தில் இருப்பது போன்ற உணர்வு.மேப்பில் அந்த விமானத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.
விமானம் டேக் ஆப் ஆகி 5 நிமிடம் ஆகிவிட்டதாக அது சொல்லியது.
"டேய் பைலட்டோட சாட் செய்ய முடியுமாடா" இது கோபால்.
"ஆமா,ரொம்ப ஆசை தான்" என்றேன்.
இரண்டு மணிநேரமாகியிருக்கும். என்னமோ நடந்திருக்க வேண்டும்.
பதட்டமாக கோபால் கத்தினான்.
"டேய் இங்க பாருடா We could not get the status of this flight-ன்னு என்னமோ சொல்லுது"
தூங்கிப்போயிருந்தேன்.

தமிழ்/ஆங்கில பைபிள் உங்கள் கணிணியில் நிறுவ வசதியான .exe வடிவில். Tamil / English Bible in installable .exe format Download here. Right click and Save.Download