Thursday, May 8, 2008

திருட்டுத்தனமாய்..

தவிர்க்கவே இயலாதநிலமைக்கு இணையவழி வர்த்தகங்களும், இணையவழி வங்கிச்சேவைகளும் வந்துவிட்ட போதிலும் அவ்வப்போது நாம் கேள்விப்படும் சில தகவல்கள் இந்த மொத்த வலைக்கட்டுமானத்தையும் சிறிது சந்தேகக்கண்ணோடேயே எப்போதும் பார்க்கவைத்து விடுகின்றது.

எடுத்துக்காட்டாக இரவுபகலாக உழைத்து நான் எழுதிய மின்புத்தகம் ஒன்றை இணையத்தில் விற்பனைக்கு வைத்துள்ளேன் என வைத்துக்கொள்வோம் அல்லது ஏதோ ஒரு குப்பை மென்பொருளை சற்று கவர்ச்சியாக்கி பல மார்க்கெட்டிங் யுத்திகள் பயன்படுத்தி, அதாவது இதை பயன்படுத்தி கலிபோர்னியா ஜாக் மாதம் $3000 சம்பாதிக்கின்றார், ஷாங்காய் டிங்டியூங் மாதம் $5000 சம்பாதிக்கின்றார் என்றெல்லாம் ரீல் விட்டு அந்த மென்பொருளை நான் விற்க்க , அதை ஏதாவது ஒரு ஏமாளி $50 கொடுத்து வாங்க அதன் மூலம் நான் பணம் சம்பாதிக்க இதெல்லாம் சகஜம்.

50 டாலர் கொடுத்து வாங்கிய அவன் கொடுக்கப்பட்ட 200 பக்க மின்புத்தகத்தை அட்டை டூ அட்டை படித்து அதன் படி செயல்பட்டால் தான் ஆரம்பத்தில் வாரத்துக்கு 2 டாலராவது பார்க்க முடியும். அதையும் தாண்டி இன்னும் பல தொழில்நுட்ப கோளாறுகளையும் போராடி வென்று இல்லை இல்லை வெறுத்துப்போவான். அடப் போனா போகுது 50 டாலர்னு நிமிடத்தில் வாங்கிய மென்பொருளையும் மின்புத்தகத்தையும் அழித்துவிட்டு உருப்படியான வேறு வேலை பார்க்க சென்றுவிடுவான்.

காசு சம்பாதிக்க ஆலோசனை தருகின்றேன், Make money using Adsense, Wordpress, ebay, Blogger, Make money using affliates, Websites அப்படி இப்படினு சொல்லி ஈபுக் பேக்கேஜ் விற்க்கிறவன் மட்டும் நல்ல காசு பார்த்துக்கொண்டிருப்பான்.

பாருங்கள், எதையோ சொல்லவந்து எங்கேயோ வந்து விட்டேன்.

ஓகே, இதுமாதிரி ஆன்லைனில் மென்பொருளோ அல்லது மின்புத்தகமோ விற்பவர்களிடம் போய் வாங்கும் போது முதலில் நம் பெயர் விலாசம் போன்ற தகவல்களையெல்லாம் கேட்பர், அடுத்து கிரெடிட்கார்டு அல்லது பேப்பால் வழி காசு கொடுக்கவேண்டும், காசு கொடுத்து முடிந்ததும் அவர்கள் நம்மை ஒரு பாதுகாப்பான பதிவிறக்கப் பக்கத்துக்கு கொண்டு செல்வர். அங்கு அவர்கள் நமக்கு நன்றி சொல்லி விட்டு ஒரு சுட்டி கொடுப்பர் அந்த சுட்டியிலிருந்து அந்த குறிப்பிட்ட மென்பொருளை அல்லது மின்புத்தகத்தை இறக்கம் செய்து கொள்ளலாம். இதை Thankyou page அல்லது Download page என்பர்.

சரி.இருக்கட்டும்.இப்போது இந்த Thankyou Page-க்கு காசு கொடுக்காமலே நேரடியாக போவதற்கு வழி தெரிந்துவிட்டால்.உங்களுக்கு 50$ லாபம். அவர்களுக்கு 50$ நஷ்டம். இல்லையா? ஆமாம். அப்போ அந்த Thank You Page-க்கு நேரடியாக போவது எப்படி?

பொதுவாக இந்த Thank You Page-களை கூகிளில் நீங்கள் தேடினாலே மாட்டும். பெரும்பாலும் கூகிள் இப்பக்கங்களை தேடலில் காட்டமாட்டான். ஆனால் கூகுளும் காண்பிக்க நான் பாத்திருக்கின்றேன். Alexa தேடு எந்திரம் தான் ரொம்ப டேஞ்சர்.

இந்த தேடு எந்திரங்களில் போய் A charge from CLKBANK அப்படினு தேடினால் ஏகப்பட்ட Thankyou page-கள் அகப்படும்.இப்படி நேரடியாக திருட்டுத்தனமாய் "நன்றிப் பக்கம்" போய் பிறரின் டிஜிட்டல் சொத்துக்கள் திருடப்பட வழிகள் இருக்கின்றன. உங்களுக்காக ஒரு எடுத்துக்காட்டு சுட்டி கொடுத்திருப்பேன். ஆனால் யாரோடேயாவது வயிற்றில் கைவைத்தல் பாவம் இல்லையா.

இப்போது சொல்லுங்கள்.எதை நம்பி இந்த இணையத்தில் நாம் கடை விரிக்க.

நண்பர் Prakash K கேட்டிருந்தார்.
Hi PKP,
Ur blog is cool... learned a lot from your blog, Need some advice from you for joining gold quest, could you please keep one post for gold quest....?


பிரகாஷ்! இது பற்றி நண்பர் பொன்வண்டு ரொம்ப விரிவாய் எழுதியிருக்கின்றார்.
எட்டிப்பாருங்கள். குவெஸ்ட் நெட் மோசடி! மென்பொருள்துறையினர் பாதிப்பு!

(தமிழ்மொழி நன்கு அறிந்தோருக்கு ஒரு சிறு கேள்வி: தவிர்க்க, விற்க்க என்ற வார்த்தைகளில் புள்ளிகொண்ட எழுத்துக்கள்(மெய் எழுத்துக்கள்) இரண்டு சேந்து வருகின்றனவே இது தவறா? இரண்டு மெய்யெழுத்துக்கள் சேர்ந்தால் போல் ஒரு வார்த்தையில் வரக்கூடாதுவென பள்ளியில் படித்தது போல் ஒரு நியாபகம்)


சுஜாதா சிறுகதை எப்படியும் வாழலாம் Sujatha Eppadiyum Vaazalaam Short story in Tamil pdf Download. Right click and Save.Download