
சமயத்துக்கு கிரெடிட்கார்டு கடனுக்கு காசுகட்டணும். முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு கார் கடனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு போனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு இண்டர்நெட்டுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
சமயத்துக்கு வீட்டு கடனுக்கு காசுகட்டணும்.முன்பெல்லாம் இத்தொல்லை கிடையாது.
இப்படி அநேக புதுத் தொல்லைகள். அவ்வளவு எளிதாய் மறக்க முடியாதவை.
இது போக அலுவலகத்தில் தாறுமாறாய் அநேகப் பணிகள்.அதிமுக்கியம் முதல் சர்வசாதாரணம் வரை.
நண்பர் முருகேஷ் கேட்டிருந்தார்.
Hello Mr. PKP,
I'm searching for a Reminder (for birthdays, to-do list items) software (especially freeware). If you already know about some utility, can you let me know?
Thanks in Advance
Murugesh
அது அதுக்கு சமயத்தை முன்கூட்டியே குறித்து வைத்துவிட்டால் அந்தந்த வேலை அந்தந்த சமயத்தில் சரியாய் நடைபெற்றுவிடும் என்று ஒரு நம்பிக்கை.என்ன அதற்கொரு ரிமைண்டர் வேண்டும், இதுதான் நண்பர் முருகேஷின் எண்ணம்.
எனக்குத் தெரிந்து மென்பொருள்களில் மூன்று வகை நினைவூட்டிகள் உள்ளன.
ஒன்று. இம்மென்பொருளை உங்கள் கணிணியில் நிறுவிவிடவேண்டும்.நீங்கள் கணிணில் நுழைந்ததும் அன்றைய தின அலுவல்களை உங்களுக்கு இது நினைவூட்டிக் கொண்டேயிருக்கும். அதற்கு உதாரணம் கீழ்கண்ட மென்பொருள்.
Rainlendar
இரண்டாவது. நீங்கள் ஃபயர்பாக்ஸ் பயன்படுத்தினால் அதன் Extension-ஆக இந்த நினைவூட்டி மென்பொருளை பயன்படுத்தமுடியும். பிரச்சனை என்னவென்றால் ஃபயர்பாக்ஸ் எப்போதும் ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அப்போது தான் இவ்வகை மென்பொருள்களால் உங்களை உஷார் படுத்தமுடியும்.
ReminderFox
மூன்றாவது வகை ஆன்லைன் நினைவூட்டிகள். ஆன்லைனில் நுழைந்து உங்கள் பணிகளை வரிசைப்படுத்திவிட்டால் சமயம் வரும் போது email வழி அல்லது instant messenger வழி அல்லது SMS வழி உங்களுக்கு reminders வந்து கொண்டேயிருக்கும். அதற்கு உதாரணம் கீழே.
http://www.rememberthemilk.com
மூன்றில் உங்களுக்கு உகந்ததை நீங்கள் தான் தெரிவு வேண்டும். எடுத்தாலும் எடுத்தீர்கள் நல்லதொரு முடிவு எடுத்தீர்கள். ஜமாயுங்க முருகேஷ்!!
