
"குருவி" பார்க்கலாம்னு இருக்கீங்களா? சென்னையில் எங்கெங்கு அது ஓடுதுனு தெரியுமோ? தெரியாதுனு வைச்சுக்கங்க. அதை தெரிஞ்சுக்க கீழ் கண்ட சுட்டியை கிள்ளுங்கள்.பின் Chennai,Madurai அல்லது Salem-னு டைப்புங்கள். ஓடும் திரைப்படங்கள், திரை அரங்குகள், ஓடும் நேரம் எல்லாம் அழகாய் கூகிள் காட்டுகின்றான்.
http://www.google.co.in/movies
கூகிள் கூட செல்போன்களுக்கு குறுஞ்செய்தி இலவசமாய் அனுப்ப வசதி செய்து கொடுத்திருக்கின்றான் தெரியுமோ? கீழ் கண்ட சுட்டியை கிள்ளிப்பாருங்கள்.
http://toolbar.google.com/send/sms/index.php
எனது ஜிமெயில் ஐடி PKPblog@gmail.com எனவைத்துக்கொள்வோம். நீங்கள் ஒருவேளை PKP.blog@gmail.com -க்கோ அல்லது P.K.P.blog@gmail.com-க்கோ அல்லது p.k.p.b.l.o.g@gmail.com- க்கோ மின்னஞ்சல் அனுப்பினால் அது தவறாமல் எனக்கு தான் வந்து சேரும். ஏனென்றால் ஜிமெயில் புள்ளிகளை பெரிதாய் கண்டுகொள்வதில்லை. நெசமாதான். வேணும்னா முயன்று பாருங்கள்.
எனது ஜிமெயில் ஐடி PKPblog@gmail.com எனவைத்துக் கொள்வோம். நீங்கள் ஒருவேளை PKPblog+tamil@gmail.com-க்கோ அல்லது pkpblog+blogspot@gmail.com-க்கோ மின்னஞ்சல் அனுப்பினாலும் அது தவறாமல் என்னைத் தான் வந்து சேரும். ஏனென்றால் ஜிமெயில்கார் +அடையாளத்துக்கு அப்புறமாய் என்ன வந்தாலும் கண்டுக்கமாட்டார். நெசமாத்தான்.
கீழ்கண்ட கூகிளின் சுட்டி தான் என்னை மிகவும் ஆச்சரியப் படவைத்தது.இந்த சுட்டியில் போய் ஆங்கிலத்தில் சும்மானாலும் vadu-ன்னு டைப்பினால் கூகிள் உடனே தமிழில் என்ன வடுவூர்குமாரையா தேடுறனு ஆலோசனை கேக்கின்றான்.(மேலேபடம்) tamilne-ன்னு டைப்பினால் கூகிள் உடனே தமிழில் என்ன தமிழ்நெஞ்சத்தையா தேடுறனு ஆலோசனை கேக்கின்றான். நீங்களும் டைப்பி பாருங்களேன்.கலக்கறான்பா கூகிள்.ஆச்சர்யமாக்கீது.
http://www.google.co.in/intl/ta/
