
துறவி ஒருவர் நதியினிலே நீராடிக் கொண்டிருந்தாராம். அவரின் சீடர்கள் நதிக்கரையிலே அமர்ந்திருந்தனர். ஆற்று நீரிலே தவறி விழுந்த தேளொன்று தண்ணீரிலே தத்தளித்துக் கொண்டிருப்பதை அத்துறவி பார்த்துவிட்டார். தன் கைகளினாலே அத்தேளை தூக்கி தரையினிலே விட எத்தனித்தார். அவ்வளவுதான் மறுவினாடியே அத்தேள் அவர் கையிலே கொட்டியது. வலியினால் கையை உதறிய துறவியின் கையிலிருந்து தேள் மீண்டும் தண்ணீரிலே விழுந்தது. வினாடிகூட தாமதிக்காமல் மீண்டும் அத்துறவி தன் கைகளினால் அத்தேளை தூக்கி காப்பாற்ற முயலுகின்றார். ஆனால் மறுகணம் மீண்டும் அத்தேள் துறவியின் கரத்தை கொட்டுகிறது. இதனை பார்த்துக் கொண்டிருந்த சீடர்கள் "அதை விட்டுத்தள்ளுங்கள் குருவே! நீங்கள் அதற்கு நன்மை செய்ய விழைய விழைய ஆனால் அது உங்களுக்கு தீமையல்லவோ செய்கின்றது" என கேட்கின்றனர். ஆனால் அத்துறவியோ விடுவதாய் இல்லை."நல்லது செய்வது என் சுவாபம் என்றால் கொட்டுவது அதன் சுபாவம்.அது தன் குணத்தை மாற்றாத போது நான் மட்டும் ஏன் என் குணத்தை மாற்றவேண்டும்" என கேட்டாராம்.
ஒருவேளை நீங்கள் ஆயிரம் முறை கேட்ட கதையாக இக்குட்டிக்கதை இருக்கலாம். ஆனாலும் அவ்வப்போது எனக்கு புத்துணர்வு தரும் கதைகளில் இதுவும் ஒன்று.
![]() அன்பாயிருங்க, அதுக்குனு அடிமையாயிடாதீங்க இரக்கம் காட்டுங்க, பாத்து ஏமாந்திடாதீங்க. |
