இதோ நான் விரும்பும் மடிக்கணிணி கூடுதல்கள்
- மடிக்கணிணியை பூட்டிங் செய்யாமலேயே அதாவது விண்டோசினுள் நுழையாமலேயே உடனடி VCD, DVD, ACD-யை ஓடவிடும் வசதியுடன் அது வர வேண்டும். Dell இதை MediaDirect என்கின்றது. HP இதை Quickplay என்கின்றது.அதற்கான Play பொத்தான்கள் கீபோர்டிலேயே இருக்கும்.
- சோனி மடிக்கணிணிகள் ”Hard Disk Drive Recovery" எனப்படும் ஒரு Hidden Partition-னோடு வருகின்றன.விண்டோஸ் கிராஷ் ஆனால் எளிதாக ஒரு கீயை தட்டினால் போதும். நொடியில் மீண்டும் விண்டோஸ் புதிதாக அதிலிருந்து நிறுவப்படும்.
- Lightscribe வசதியோடு உங்கள் மடிக்கணிணி வந்தால் கொண்டாட்டம் தான். VCD DVD எரிக்கும் போது அது அப்படியே அந்த தட்டுகளின் மேல் அழகாக லேபிளையும் எழுதிவிடும்.அப்படியே அது blu-ray வசதியும் கொண்டிருந்தால் சந்தோசம்.
- ஒரு ஹார்ட்டிரைவை கழற்றி போட்டுவிட்டு சட்டென இன்னொரு ஹார்டிரைவை மாட்டும் வசதி உங்கள் மடிக்கணினியில் வேண்டுமா? Swappable Drive Bay உள்ள மடிக்கணிணி பார்த்து வாங்குங்கள்.IBM Lenovo-வில் பார்த்த ஞாபகம்.
- படத்தில் நீங்கள் காணும் புதிய வகையான DVI வீடியோ போர்ட்டுகள் தட்டை மானிட்டருக்கேற்ற உச்ச தர டிஜிட்டல் வீடியோவை கொடுக்கின்றதாம்.
- HDMI போர்ட்டும் HDTV-யும் இருந்தால் வீட்டில் ஜாலிதான். மடிக்கணிணியில் ஓடும் வீடியோவை உச்ச தரத்தில் ஆடியோவோடு உங்கள் டிவியில் கண்டுகளிக்கலாம்.
- Biometric Fingerprint Reader இருந்தால் உங்கள் விரலை அடையாளம் கண்டு அது உங்களை மட்டுமே உள்ளே நுழைய அனுமதிக்கும் .அப்படியே முகத்தையும் அடையாளம் காண Face Recognition கேமராவும் இருத்தல் நல்லது.
- நெட்வொர்க் கார்டு, வயர்லெஸ் (வை-ஃபை) வசதியோடு Bluetooth-ம் அவசியம் இருப்பது நல்லது.
- அவ்வளவு அவசியமில்லை என்றாலும் இன்ஃப்ராரெட் தகவல் தொடர்புக்கு CIR port உதவலாம். (பழைய IrDA -ன் வாரிசு).
- மற்றபடி அவசரத்துக்கு Cellular Modem அல்லது TV Tuner போன்றன செருகிக் கொள்ள ExpressCard 54 slot கண்டிப்பாக இருத்தல்வேண்டும். (பழைய PCMCIA -ன் வாரிசு)
- FM கேட்டுக்கொண்டே "இலக்கியம்" எழுத Built-in FM Tuner இருந்தால் நன்னா இருக்கும்.
- 8 in 1 Memory card reader (SD/MS/MMC/XD) இருந்தால் எல்லாவகை கேமரா மற்றும் செல்போன் மெமரிகார்டுகளையெல்லாம் எளிதாய் செருகி பயன்படுத்தலாம்.
- சில வகையான கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்களை செருக IEEE 1394 அல்லது Firewire போர்ட் இருக்கவேண்டும்.
- USB போர்ட் eSATA/USB combo port ஆகவும் வெர்சன் 2.0 ஆகவும் இருத்தல் நல்லது. அப்படியே அவை Sleep-and-Charge USB போர்ட்டாக இருந்தால் மடிக்கணிணி ”OFF" ஆக இருக்கும் போது கூட USB போர்ட் வழி என் ஐபோனையும் ஐபாடையும் சார்ஜ் செய்ய இயலும்.Toshiba-வில் பார்த்த நியாபகம்.



பாருங்கள்.மனுஷனுக்கு எத்தனை ஆசைகள்.
![]() பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை. |
