
25 டாலர் கொண்டு நாம் என்னத்தை சாதித்து விடப்போகின்றோம் என யோசித்துக் கொண்டிருக்கையில் அதே 25 டாலரை எதாவது ஒரு கால்நடையிலோ அல்லது கைத்தொழிலோ முதலாக்கி உங்கள் இந்த சிறு உதவியினால் தங்கள் வாழ்க்கையை ஓட்ட இங்கு கோடிக்கணக்கில் மக்களிருக்கின்றார்கள்.
இந்த மைக்ரோஃபைனான்சிங் மூலம் உலகின் எங்கோ ஒரு மூலையிலிருக்கும் ஒரு ஏழைக்கு 25 டாலர் வழங்குகின்றீர்கள் என வைத்துக்கொள்வோம். அவன் அதனைக் கொண்டு ஒரு சிறு தொழில் செய்து தன் பிழைப்பை ஓட்டுகின்றான். ஆறுமாதம் கழித்தோ அல்லது ஒரு வருடம் கழித்தோ அப்பணம் அப்படியே உங்களிடம் திரும்பிவந்து விடும். கர்மாவில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் அதுவும் அதனோடு சேர்ந்து வரும்.
இப்படி சிறு சிறு கடனுதவிகளை மைக்ரோகிரெடிட்களாக ஆங்காங்கே தவிக்கும் பல நெஞ்சங்களுக்கு கொடுத்து உதவ ஆன்லைனிலேயே வழியிருக்கின்றது.
http://www.kiva.org
இங்கு நீங்களே யாருக்கு நிதி உதவப்போகின்றீர்கள் என ஒவ்வொருவரின் ப்ரொபைலையும் படித்து ஒரு முடிவுக்கு வரலாம். ஒருவேளை உங்கள் தொழிலை அபிவிருத்தி செய்ய நீங்களே கூட கடன்கேட்க விரும்பினாலும் இங்கு உங்கள் திட்டங்களை விவரித்து நீங்களும் நுண்கடன் கேட்கலாம்.
மற்றபடி மார்வாடி கணக்காய் வட்டிக்கு கடன் கொடுக்க/வாங்க திட்டமிருந்தால் http://www.prosper.com -க்கு போங்கள். நியாபகமிருக்கட்டும், இரண்டிலுமே ரிஸ்க் இருக்கின்றது.
![]() ஒரு Gif அனிமேசன் |
