
இப்படித்தான் ஜானி எனும் 28 வயது இளைஞன் Wii remote controller-ஐயும் head tracking glass-களையும் வைத்து எப்படி மிக எளிதாக விர்சுவல் ரியாலிட்டி செய்வது என செய்து காட்டி அதை 5 நிமிட வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இன்றைக்கு அவ்வீடியோ 6 மில்லியன் தடவை பார்க்கப்பட்டிருக்கின்றது. இது போல இவனுடைய இன்னும் சில இன்னோவேடிவ் ஐடியாக்களையும் வீடியோவாக்கி யூடியூபில் போட்டான். இவன் கண்டுபிடிப்புகளை கண்டு ஆச்சரியத்தில் வியந்த பெரிய பெரிய வீடியோ கேம் நிறுவனங்களெல்லாம் இவனை மொய்த்தன. சீக்கிரத்தில் இவனைப்பற்றிய பேச்சு மைக்ரோசாப்டிலும் அடிபட ஆரம்பித்தது. ஜானியை மைக்ரோசாப்டில் வேலைக்கு இழுக்க பில்கேட்சை அணுகியபோது அவருக்கு ஏற்கனவே இவனை பற்றி தெரிந்திருந்ததாம். அவருக்கும் ஜானியை வேலைக்கு எடுப்பதில் ரொம்ப சந்தோசம். இப்போது ஜானி Microsoft - Applied Sciences துறையில் ஒரு Researcher. ஐந்து நிமிட யூடியூப் வீடியோ இவன் வாழ்க்கையையே மாற்றிப்போட்டுவிட்டது.
ஒருவேளை இவன் ஒரு ஆய்வுக்கட்டுரை எழுதியிருந்தால் அதை ஒரு சில பேர் மட்டுமே படித்திருப்பர். ஒரு தொழில்நுட்ப அரங்கில் பேசியிருந்தால் மேலும் சில நூறு பேர் மட்டுமே கேட்டிருப்பர். ஆனால் இவன் குரல் மைரோசாப்ட் வரை எட்ட யூடியூப் ஒரு ஊடகமாக அமைந்தது. மாபெரும் கூட்டத்தையும் எளிதில் எட்ட இன்றைக்கு இருக்கும் வசதிகள் இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதமே. லாவகமாய் பயன்படுத்துவோர் வெற்றி பெறுகின்றனர். வெட்டிவேலைகளில் புகுவோர் சிக்கலில் வீழ்கின்றனர்.
![]() நீ திருந்து.. நாடே திருந்தும்... |
