
GPS என்பது வழி தெரியாதவர்களுக்குக் கூட வழிகாட்டும் ஒரு கையடக்கமான சாதனம். இது விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் சேட்டலைட்டுகள் அனுப்பும் அலைகள் உதவியோடு நீங்கள் சாலையில் போக வேண்டிய இடத்துக்கு வழிகாட்டும். இதுமாதிரியான அலைகளை பூமியில் ஹேக்கர்களே செயற்கையாக உருவாக்கி உலவவிட்டு ஷாப்பிங் போக மால் தேடும் கதாநாயகியின் காரின் GPS-ஐ குழப்பத்தில் ஆழ்த்தி அதை தங்கள் வசப்படுத்துவதுதான் இங்கு சாமர்த்தியம். இது சாத்தியம் என சில Cornell University பெரிசுகள் நிரூபித்து காட்டியிருக்கின்றார்கள்.
இப்போதைக்கு பள்ளிக்கூட பொடிசும் செய்யும் அளவுக்கு இந்த GPS ஹேக்கிங் ஒன்றும் அத்தனை எளிது அல்ல. மிலிட்டரி அளவில் யோசிக்கின்றார்கள். எங்கோ செல்ல வேண்டிய பட்டாளத்தை இன்னொருபுறமாய் திசைத் திருப்பிச் சென்றுவிட வைக்க இதனால் முடியும். ஈராக் போக வேண்டிய அங்கிள் சாமின் தளவாடங்கள் இப்படி GPS ஹேக்கப்பட்டு ஈரான் சென்றால் மூன்றாம் உலகப்போர் நிச்சயம். சாவேசும் புடினும் சேர்ந்துக்குவர். எதற்கும் GPS -சோடு கையில் ஒரு காகித அட்லஸையும் வைத்திருத்தல் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.
இப்படித்தான் GPS-ஐ முழுசாக நம்பி ரோட்டில் ஏமாந்தவர்களையும் கேள்விப் பட்டிருக்கின்றேன். பக்கத்து பர்கர்கிங்கை தேடிச் சென்றவரை அது எங்கோ ஒரு காட்டிற்குள் கொண்டு விட்டதாம்.
![]() செய்ய முடியாதவன் போதிக்கிறான். -பெர்னாட்ஷா |
