
இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான கைத்தொலைப்பேசிகள் ஒரு குட்டி கணிணி போலவே செயல்படுகின்றன. அது வழியாய் இணையம் கூட மேயமுடிகின்றது. லாஸ்ஏஞ்சலசில் நான் எனது ஐபோன் வழி Yahoo Messenger-ல் நுழைய
லண்டனில் நண்பன் பாஸ்கர் அவனது N95 வழி Yahoo Messenger-ல் நுழைய இருவரும் மணிக்கணக்கில் voice chat-ல் பேசிக்கொண்டே இருக்கலாம். இது சர்வதேச அழைப்பாகாது. அதாவது இங்கு நாங்கள் பேசும் போது தொலைப்பேசி நுட்பத்தை (Air time) பயன்படுத்தவில்லை. மாறாக VOIP எனப்படும் இணைய வழி தொடர்பையே பயன்படுத்துகின்றோம். இது உங்கள் Data Plan மீட்டரை தான் கூட்டுமே தவிர தொலைப்பேசி பில்லை அல்ல. அதுவும் இங்கு அமெரிக்காவில் AT&T "unlimited" Data Plan-னை மாதம் $30க்கு தருகின்றார்கள். Data Plan கட்டண கவலையின்றி மணிக்கூர்கணக்கில் பேசிக்கொண்டே இருக்கலாம். ஒரு தகவலுக்கு எடுத்துக்கொண்டால் ஐபோன் வழி ஒருமணி நேரம் பேசினால் 8MB டேட்டா மட்டுமே டிரான்ஸ்பர் ஆகியிருக்குமாம்.
இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இந்தியாவில் உங்களிடம் இருந்தால் நீங்களும் இலவச சர்வதேச கால்கள் செய்யலாம். மறுமுனை நபரிடமும் இணைய இணைப்புடன் கூடிய கைப்பேசி இருக்கவேண்டும்.அது 3G, GPRS, WiFi அல்லது EDGE என எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
இது ஒரு அருமையான தந்திரம். சர்வதேச தொலைபேசி சேவை நிறுவனங்கள் பல போன் கார்டுகள் வழி கோடிகோடியாய் பணம் பார்த்துக்கொண்டிருக்கும் போது இதை எப்படி சம்மாளிக்கப்போகின்றார்கள் என தெரியவில்லை.
ஆ,மறந்து விட்டேனே.மேற்கண்ட தந்திரத்தை செய்ய உதவும் மென்பொருளின் பெயர் fring.
உங்கள் கைப்பேசிக்கான சரியான fring மென்பொருளை இலவசமாக இங்கிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.
http://www.fring.com/downloado/
தகவலுக்கு நன்றி: Manikandan R
