
"இரண்டு விவரணப்படங்கள்" என்ற எனது முந்தைய பதிவில் இரு டாக்குமென்டரி வீடியோக்களை அறிமுகப்படுத்தியிருந்தேன்.
LAV enkat எழுதியிருந்தார்,Dear Mr.PKP,I am regular reader of your blog and GREAT job done. I like your simple writings so anyone can understand. However today this blog I couldn't understand at all. Can you explain in more detail so everyone understand.Thankx.
நன்றி LAV enkat!! கொஞ்சம் குழப்பிவிட்டேனோ?
Zeitgeist என்ற விவரணப்பட வீடியோவின் மூன்றாம் பாகத்தை நீங்கள் பார்த்திருந்தீர்களானால் நான் சொல்ல வந்தது உங்களுக்கு புரிந்திருக்கலாம். நான் அங்கு குறிப்பிட்டுச் சொன்ன "அந்த தொழில் நுட்பம்" நாம் இங்கு ஏற்கனவே பேசிய "RFID" -தான். சீக்கிரத்தில் இந்நுட்பம் சக்கைபோடு போடப்போகின்றது பாருங்கள். இது பற்றிய எனது முந்தைய பதிவு இதோ. "மனிதனுக்குள் ஒரு சிப்" ஒரு நிமிடம் இந்த சுட்டியை சொடுக்கி அப்பதிவை படித்து விட்டு மீண்டும் இப்பதிவை தொடர்தல் நல்லது.
சந்தேகமே இல்லாமல் இது ஒரு scary-யான தொழில் நுட்பம்தான். ஆயிரம் அருமைகள் இருந்தாலும் இதனால் மனிதனின் பிரைவஸி மற்றும் சுதந்திரம் காணாமல் போய்விடும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் திரண்டு வரும் தொழில் நுட்பமுன்னேற்றங்களை யாரால் தடுக்க இயலும்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் நம்மில் பலரும் இந்த Radio-frequency identification எனப்படும் RFID தொழில் நுட்பத்தை ஏற்கனவே தாங்களே அறியாமல் பயன்படுத்தி வருகின்றார்கள். கோபாலிடம் நீயும் பயன்படுத்துகிறாய்டா என்றேன். "வாட்" என்றான். அவன் பயன்படுத்தும் கிரெடிட் கார்டு ஒன்று இந்த RFID சிப் நிறுவப்பட்டது. எதிர்கால கடனட்டைகள் இந்தமாதிரி ஒரு சிப்பை உள்ளடக்கியே வருமாம். இந்த சிப் உங்கள் கடனட்டை பற்றிய தகவகள் அனைத்தையும் கொண்டிருக்கும். இதில் ஒரு சிக்கலும் இருக்கின்றது. டன்கின்டோனட்ஸ் வரிசையில் நிற்கும் கோபாலருகே தனது பாக்கெட்டில் RFID scanner வைத்திருக்கும் ஒரு ஹேக்கர் நெருங்கினால் அந்த RFID scanner-ஆல் இவன் கிரெடிட் கார்டு தகவல்களை வயர்வெஸ்ஸாய் படிக்க முடியும்.இந்த அலைவரிசை தொடர்பை தடுக்கத்தான் புதிதாக ஒருவித பர்ஸை சந்தையில் அறிமுகப்படுத்தியிருக்கின்றார்கள். அதன் பெயர் RFID Blocking Wallet.என்னமோ அதில் alloy shielding material இருக்கிறதாம். அது அந்த அனாவசிய ஸ்கேனர்கள் படிக்கமுடியாமல் சுவர்போலிருந்து தடுத்துவிடுமாம்.
நீங்கள் படத்தில் காண்பது போல் சிவப்பு வட்டமிட்டது போன்ற குறிகள் உள்ள கடனட்டை பயன்படுத்துவோராயின் அது RFID கொண்டது என தெரிக.


தனது கிரெடிட் கார்டுகளை வரிசையாய் அடுக்கி வைத்துப் பார்த்து "நான் தப்பித்தேன்பா" என்றாள் பரிமளா.
"இல்லை" என்றேன் நான். திகிலுடன் என்னை பார்த்தாள்.
விளக்கினேன்.
"உன்னைப் பார்த்தால் இந்தியப்பெண் போல இருக்கின்றாய், பேச்சுக்கொடுத்தால் அமெரிக்க ஜாடை வீசுகின்றது, வைத்திருக்கும் புத்தகங்களோ ஃப்ரெஞ் தலைப்பிட்டவை, கேட்கும் பாடல்கள் எல்லாம் அரபிக் இதெல்லாம் குழப்புபவைதான். ஆனாலும் RFID scanner வைத்திருக்கும் அந்த ஹேக்கர் உன்னை நெருங்கினால் எளிதாய் அவன் சொல்வான் நீ அமெரிக்க பிரஜை என்று. எப்படி என கேட்கின்றாயா? நீ வைத்திருக்கும் அமெரிக்க பாஸ்போர்டில் RFID இருக்கின்றது" என்றேன்.
நேகாவுக்குமாய் சேர்த்து மூன்று வேலட்கள் ஆர்டர்பண்ணியிருக்கின்றோம்.
