Wednesday, August 13, 2008

இரண்டு விவரணப்படங்கள்

டிவிடி பிளயரிலுள்ள USB போர்ட்டில் நேரடியாக ஒரு பென் டிரைவை இணைத்து டிவியில் மூவி பார்க்கின்றோம். காரின் AUX ஆடியோ input-ல் கேபிளை நுழைத்து கையிலிருக்கும் ஐபாடு பாட்டு ஒன்றை காரு அதிர கேட்கின்றோம்.Majic Jack-க்கை இந்திய கணிணி ஒன்றில் இணைத்து அமெரிக்காவுக்கு லோக்கல் கால் செய்கின்றோம்.இப்படி மனதுக்கு இதமான சுகமான அநேக தொழில் நுட்பங்கள் சந்தைகளில் வந்து கொண்டிருந்தாலும் சில நுட்பங்கள் ஏனோ நம்மை பகீரென திகில் பிடிக்கும் வண்ணமும் வைக்கின்றன.அந்த மாதிரியான ஒரு தொழில் நுட்பத்தின் அடுத்த நிலை பற்றிய ஊகத்தை சமீபத்தில் ஒரு டாக்குமெண்டரி திரைப்படம் மூலம் அறிய வந்தேன். நம் வலைப்பூவில் நாம் ஏற்கனவே பேசிய தொழில் நுட்பம் தான் அது என்றாலும் சற்று வித்தியாசமான கண்ணோட்டத்தில் மொத்த மனித குலத்தையே யாருக்கோ அடிமைப்படுத்தும் பாங்கில் மெதுவாக எழும்பிவந்து கொண்டிருக்கின்றது "அந்த நுட்பம்" என்கின்றார்கள்.

மாற்றுக்கருத்துக்களை அடித்துக்கூறும் கான்ஸ்பிரசி தியரிகளில் (Conspiracy Theory) எனக்கு அவ்வளவாய் நம்பிக்கை இல்லாவிட்டாலும் உலகம் போகின்ற போக்கை பார்த்தால் சில சமயம் என்னையும் அறியாமல் சந்தேகம் துளிர்க்கின்றது. இங்கு நான் வழங்கும் இந்த விவரணப்படம் மூன்று பாகங்களை கொண்டுள்ளது. முதல் பாகம் கடந்தகால நிகழ்வொன்றை சந்தேகப்படுகின்றது. இரண்டாம் பாகம் சமகால நிகழ்வொன்றை சந்தேகப்படுகின்றது. எனது அபிமான அந்த மூன்றாம் பாகம் எதிர்காலத்தை பற்றியது. இருக்கையின் விளிம்புக்கே அது நம்மை கொண்டு வந்துவிடுகின்றது. இரண்டு மணிநேர அவகாசமிருந்தால் பொறுமையாய் அமர்ந்து பாருங்கள். ஆங்கில சப்டைட்டிலும் உண்டு. மெதுவாக ஆரம்பிக்கும் அது போகப் போக சூடுபிடிக்கும். வெயிட்டான பல விஷயங்களையும் எளிதாக சொல்லியிருக்கின்றார்கள். (ஏற்கனவே அறிமுகமானோர் தயவுசெய்து மன்னிக்கவும்)

http://video.google.com/videoplay?docid=-1817848131611744924

லைட் வெயிட் பிரியர்கள் இங்கே நடிகர் சிவாஜி கணேசன் பற்றிய 30 நிமிட தமிழ் விவரணப்படத்தை பார்க்கலாம்.
http://media.pkp.in/2007/09/sivaji-ganesan-documentary.html

ரமணிசந்திரன் அவர்களின் புதினம் "ஆசை ஆசை ஆசை" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramanichandran Aasai Aasai Aasai in Tamil pdf ebook Download. Right click and Save.Download