Sunday, August 3, 2008

வலைத்தட்டுக்கள்

சும்மாவாச்சும் இருக்கட்டுமே என Gig கணக்கில் எனது ஹார்ட் டிஸ்கில் சேமித்து வைத்திருந்த மென்பொருள்களையும், தொழில்நுட்ப Pdf புத்தகங்களையும் இப்பொழுதுது பார்க்கும் போது சிரிப்புத்தான் வருகின்றது. ஆறே மாதத்தில் எல்லாமே காலாவதியாகி (Outdated) விடுகின்றன.புதுசு புதுசாய் பதிப்புகள் வர வர அனாவசியமாய் இவை இடத்தைதான் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. அந்த வகையில் நீண்ட காலமாய் சேமித்து வைத்துக் கொள்ளலாம் எனில் சில Evergreen தமிழ் மென்புத்தகங்களையும் சில ஆங்கில பொது மென்புத்தகங்களையும் சொல்லலாம். மேலும் என்றைக்கு கேட்டாலும் இனிக்கும் சில MP3 க்கள்,எத்தனை முறை பார்த்தாலும் சலிக்கா தேர்ந்தெடுக்கப்பட்ட சில திரைப்படங்கள், குடும்ப சகிதமாய் எடுத்த ஒளிப்படங்கள், நம் வீட்டு வீடியோ கலாட்டாக்கள், திருமண சிடிக்கள், இன்னபிற நம் முக்கிய கோப்புகள் இவற்றையும் பத்திரமாய் பாதுகாக்க வேண்டியது நம் பொறுப்பு.

வீடுகளில் Network Attached Hard Disk-கள் இப்போது பிரபலம். ஒரு முறை இந்த ஹார்ட்டிஸ்கை உங்கள் வீட்டு நெட்வொர்க்கில் இணைத்து விட்டு விட்டால் போதும் அதை அதன் பாட்டுக்கு ஒரு மூலையில் வைத்துவிடலாம்.No shaking nothing. மேற்சொன்ன உங்கள் முக்கிய கோப்புகளை தைரியமாய் அதில் சேமித்து வைப்பதோடல்லாமல் உங்கள் வீட்டு பல கணிணிகளையும், மடிக்கணிணிகளையும் கூட அதில் முழுசாய் Backup செய்து வைத்துக் கொள்ள முடியும். இதன் இன்னொரு விஷேசம் உங்கள் வீட்டு நெட்வொர்க் இணையத்தோடு இணைக்கப்பட்டிருந்தால் உங்கள் அந்த Network Attached Hard Disk-க்கை உலகின் எந்த மூலையிலிருந்தும் உங்களால எட்டமுடியும். உங்கள் கணிணி ஓடிக் கொண்டிருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. அந்த Hard Disk மட்டும் ஓடிக் கொண்டிருந்தால் போதுமானது. இதற்கு Mionet போன்ற மென்பொருள்கள் உதவலாம்.

இல்லை CD தான் DVD தான் உங்கள் கட்சி எனில் உங்கள் கோப்புகளை அவ்வப்போது அவற்றில் பத்திரமாய் பேக்அப் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.எப்போவாவது உங்கள் சிடியோ அல்லது டிவிடியோ மக்கர் பண்ணினால் கீழ்கண்ட மென்பொருள்களை முயன்று பாருங்கள். பொதுவாக ஸ்கிராச்சுகள்(scratches) உள்ள CD, DVD, HD DVD, Blu-Ray தட்டுகள் ரொம்பவே தொல்லைகொடுக்கும். முடியற வரை படித்து, முடியாததை ஸ்கிப் செய்து, மீண்டும் முடிந்ததை படிக்க இந்த மாதிரியான CD Recovery மென்பொருள்கள் உதவுகின்றன.

Roadkil's Unstoppable Copier
http://www.roadkil.net/program.php?ProgramID=29

CD Recovery Toolbox
http://www.oemailrecovery.com/cd_recovery.html

ரமணிச்சந்திரன் புதினம் "வெண்ணிலவு சுடுவதென்ன" இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Ramani Chandran Novel Vennilavu Suduvathenna in Tamil pdf ebook Download. Right click and Save.Download