Sunday, August 10, 2008

குயிலப் புடிச்சு கூண்டில் அடச்சு

ஓகோ புரடெக்சன்ஸ் நாகேஷ் சார் போல மலைமேல் கதை தேடிக் கொண்டிருப்பர் நம் மாணாக்கர்கள். என்ன புராஜெக்ட் செய்யலாம், என்ன செய்வதென புரியலையே எதாவது ஐடியாகொடுங்கப்பா எப்படியாவது நாங்கள் அதை செய்து காண்பிக்கின்றோம் என ஐடியா தேடி கொஞ்சம் நாள் குரூப்பாக அலைவார்கள். தேடித்தேடி கடைசியில் புராஜெக்ட் ஒப்படைக்க நாளும் நெருங்கிவிடும் .எங்கிருந்தாவது கிடைக்கும் ஒரு ரெடிமேட் புராஜெக்டை ஒப்புக்கு சமர்ப்பிப்பர். இனியதான அந்த கல்லூரிக் காலங்களும் முடிந்து போயிருக்கும்.

உண்மையில் கூகிள் முதலான பல வெற்றிகரமான கீக்கி ஐடியாக்கள் கல்லூரி மூளைகளில் உதித்து உயர்ந்தனவே.கூர்ந்து நோக்கப்போனால் நம் இன்றைய நுட்பங்களில் கூடத்தான் இன்னும் எத்தனை சிக்கல்கள் இருக்கின்றன.Spam Scam என்று இன்னும் தீர்க்கப்படாத தொல்லைகள் வேறு அதிகம். நம் திருவாளர் பொதுமாஜனத்துக்கும் கொடுக்க வேண்டிய தீர்வுகள் அநேகம். ஆக நம் மாணவர்கள் கண்டுபிடிக்க இன்னும் ஏகப்பட்ட ஃபார்முலாக்களும், புரோட்டோக்கால்களும், அல்காரிதங்களும் இருக்கின்றன. நம் கல்லூரி வாசல்களிலிருந்து அவை இன்னோவேசன்களாக புறப்படவேண்டும். இதெல்லாம் நடக்குமா?

ஐபாடில் கோபால் முணுமுணுத்துக் கொண்டிருந்தான் "குயிலப் புடிச்சு கூண்டில் அடச்சு கூவச்சொல்லுகிற உலகம் மயில புடிச்சு காலை ஒடச்சு ஆடச் சொல்லுகிற உலகம் அது எப்படி பாடுமய்யா இது எப்படி ஆடுமய்யா" என்று. அந்த வரிகளிலிருக்கும் நியாயமும் எனக்கு பட்டது. ஒரு சின்ன வெப்சைட் உருவாக்கக்கூட, அதில் தன் சில பல திறமைகளை காட்ட கூட அந்த மாணாக்கனுக்கு ஒரு டொமைன் பெயர் தேவைப்படும், அப்புறம் தான் உருவாக்கிய தளத்தை ஹோஸ்ட் செய்ய ஒரு Hosting கணக்கு தேவைப்படும் அதுவும் வித் ஒன்றோ அல்லது ரெண்டோ டேட்டாபேஸோடு PHP வசதியும் வேண்டும் அவனுக்கு. பணத்துக்கு எங்கே போவான்.


சமீபத்தில் பதிவுலகில் ஓராண்டை நிறைவு செய்து வெற்றிகரமாக போய் கொண்டிருக்கும் இலங்கையிலிருக்கும் நம் நண்பர் ரிஷான்ஷெரீப்பின் தயவில் http://www.dot.tk தளம் பற்றி அறிய வந்தேன். இங்கே முற்றிலும் இலவசமாக .tk எனும் டொமைன்பெயரை கொடுக்கின்றார்கள்.Yes Register a domain name here. It's FREE! For example: www.mydomain-name.tk

(Updated: You could get a free domain name from here too http://freedomain.co.nr like www.yourname.co.nr)

ஓகே இப்போது இலவச டொமைன் பெயர் கிடைத்தாயிற்று.Hosting-க்கு என்ன பண்ணுவதாம்? இங்கே ஒரு இணையதளம் உங்களுக்கு இலவசமாக ஹோஸ்டிங்கும் தருகின்றார்கள். பாப் அப் விளம்பரங்கள் போன்ற தொல்லைகள் இன்றி. பிரபல cpanel வசதியோடு Database-கள், PHP, FTP மற்றும் Fantastico AutoInstaller வசதியோடு கலக்கல் தான் போங்கள். பளாபளாவென சூடான இணைய தள புராஜெட்கள் செய்து பரிசோதித்து பார்க்க இது ஒரு அற்புதமான இலவச சேவை.http://www.000webhost.com

எனது mydrive போல தானும் அமைக்க ஆசைப்பட்ட நண்பர் சந்தோமது ஒருமுறை என்னிடம் வழி கேட்டிருந்தார். நானும் Autoindex பற்றி சொல்லியிருந்தேன். அவரிடம் Web Hosting Account இல்லாததால் அதை செய்யமுடியாத நிலையிலிருந்தார். இப்போது 000webhost.com வழி அவருக்கு இலவசமாக mydrive வைத்துக்கொள்ள வழி வந்திருக்கின்றது. கூண்டுகெடக்குது சார்.சும்மா பறந்துபோங்க.

வைகோவின் "தணலும் தன்மையும்" தமி்ழ் மென் புத்தகம் இங்கே உங்கள் இறக்கத்துக்காக. Vaiko Thanalum Thanmaiyum Tamil pdf ebook Download. Right click and Save.Download