
இப்படி கடனட்டை நம் வாழ்க்கையை சிறிது எளிதாக்கியிருக்க அடுத்தமுறை உங்கள் கடனட்டையை பயன்படுத்தும் போது கொஞ்சம் உஷாராயிருங்கள் என்கின்றனர் மும்பை போலீசார். நீங்கள் உங்கள் கடனட்டையை அந்த டைகட்டின ஆசாமியிடம் கொடுத்துவிட்டு அரக்க பரக்க பார்த்துக்கொண்டிருக்க அந்த ஆசாமியோ பில் போடுவதோடு தன்னிடம் மறைத்து வைத்துள்ள தன் சொந்த Portable Magnetic Card Reader-ரிலும் ஒரு தேய்ப்பு தேய்த்து விடுகின்றான்.(படம்) அந்த ரீடர் கணப்பொழுதில் உங்கள் கிரெடிட்கார்டை படித்து அதிலுள்ள தகவல்களை மனப்பாடம் செய்துவைத்துக்கொள்ளும். இந்த ஆசாமி அத்தகவல்களை பின் வீட்டில் போய் தன் கணிணி வழி படித்து, அச்சு அசலாய் உங்கள் கிரெடிட் கார்டு போலவே இன்னொரு போலி கிரெடிட்கார்டை தயாரிக்கலாமாம். சந்தைகளில் பயன்படுத்தலாமாம். கதை எப்படி இருக்கு? இப்படி குறுக்குவழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு மாட்டிக்கொண்ட ஒரு கணிணி இஞ்சினியர்கள் கும்பல் மும்பையில் சமீபத்தில் பிடிபட்டுள்ளதாக சொல்கின்றார்கள். கண்ணை மூடிக்கொண்ட பூனைபோல ரொம்ப பேரின் நினைப்பு இதுமாதிரி ஹாக்கிங் செய்தால் எளிதாய் தப்பித்திடலாம் மாட்டிக்கொள்ளமாட்டோம் என்பதாகும்.தவறு நண்பரே மிக மிகத் தவறு. சரியான புரிதல்வேண்டும். ஒருவேளை அதற்கு நீங்கள் ரஷ்யா போன்ற இரும்பு தேசத்தில் இருந்தால் சாத்தியமாகலாமாயிருக்கும்.
ஸோ ஷெரேட்டனோ பார்க் இன்னோ,வால்மார்ட்டோ மெக்டானல்சோ உங்கள் கடனட்டையை அடுத்தமுறை கடைக்காரரிடம் தேய்க்க கொடுக்கும் போது அந்த கார்டிலேயே ஒரு கண் இருக்கட்டும். கண் இமைக்கும் நேரத்தில் நீங்கள் களவாடப்படலாம்.ஜாக்கிரதை.
தகவலுக்கு நன்றி:M.Rishan Shareef
