
1969-ல் நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவில் இறங்க எவ்வளவு கணிணித் திறன்கள் தேவைப்பட்டதோ அவ்வளவு கணிணி திறன்கள் நம் வீட்டுக் கணிணிகளுக்கும் போன இரண்டாயிரமாம் ஆண்டிலேயே வந்துவிட்டது. இன்றைக்கு அதை விட பலமடங்கு கணிணித்திறன்கள் கொண்ட கணிணிகள் நம் வீடுகள் தோறும் இருந்தும் எத்தனை சாதனைகள் நிகழ்ந்துள்ளன. சமீபத்தில் இங்கு ஒரு அமெரிக்கரோடு பேசிக் கொண்டிருந்தேன். சும்மானாச்சும் உங்கள் பொழுதுபோக்கு என்னவென வினவினேன். வீட்டில் ஒரு சிறு ஆய்வகமே வைத்திருப்பதாகவும் என்னென்னமோ ரிசர்ச்சுகள் மேற்கொண்டுவருவதாகவும் கூறினார்.எட்டு மணிநேர அலுவலக வேலைக்கும் அப்பால் வீட்டில் ஆய்வறை அமைத்து பல நூல்களையும் ஆய்வுசெய்து என்னவாவது புதிதாய் கண்டுபிடித்து மனித சமுதாயத்துக்கு நல்லது செய்யவேண்டும் என்ற அவரது ஆர்வம் எனக்கு வியப்பை தந்தது.மேற்கத்திய கலாச்சாரமென என்னவெல்லாமோ இறக்குமதி செய்கின்றோம் இந்த மாதிரி ஒரு சில நல்ல விஷயங்களையும் இறக்குமதி செய்குதல் நல்லது. நமக்கு சீரியல்களை பார்க்கவே சமயம் போதமாட்டேன்கிறது. ஆனாலும் சின்ன சின்ன மாறுதல்கள் நம்மூரிலும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. சமீபத்தில் நண்பர் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். மூன்று கணிணிகள் நெட்வொர்க் அமைத்து, வயர்லெஸ் ரவுட்டர், NAS , விர்சுவர் செர்வர்கள் சகிதம் ஒரு குட்டி கணிணி லேப்பே தன் வீட்டில் வைத்திருப்பதாகவும் தன் வீட்டு பொடிசுகளும் இந்த விஷயங்களில் அத்துபடி எனவும் கூறினார். மகிழ்ச்சியாக இருந்தது.
250GB ஹார்ட் டிரைவ் உள்ள மடிக்கணிணி வாங்கும் போது ஆகா இந்த ஸ்பேஸ் எனக்கு ஜென்மத்துக்கும் காணும் என்றான் கோபால். நேற்றைக்கு "Out of space" செய்தி வந்தது.என்னடா இதோட ரோதனையா போச்சுவென என்னிடம் கொண்டு வந்தான். அதில் தமிழ் சினிமா 75 வருட ஸ்பெஷல் போல் ஆடியோ வீடியோவென திருவிளையாடல் முதல் தசவதாரம் வரை இருந்தது. எதையும் அழிக்கவும் அவனுக்கு மனசு இல்லை. windirstat-டின் நினைவு வந்தது. இந்த மென்பொருளை நிறுவி மெலிதாக நோட்டமிட்டேன். எந்த எந்த ஃபோல்டர்கள் மெகா சைசு போல்டர்கள் அதில் எந்த எந்த கோப்புகள் மெகா சைசு கோப்புகள் என அழகாக அது படம் போட்டு காண்பித்தது. சீக்கிரமே அநேக தேவையற்ற மிகப்பெரிய கோப்புகளை, ஃபோல்டர்களை எளிதாய் கண்டுபிடித்தோம். அழித்துவிட்டோம். அரைமணிநேரத்தில் 10GB வரைக்கும் மீட்டெடுத்தோம். நீங்களும் பயன்படுத்த இது ஒரு நல்ல இலவச மென்பொருள்.எங்கோவோ எப்போதோ அவசரமாய் காப்பி செய்து வைத்து பின் மறந்து போன மெகாசைஸ் போல்டர்கள் மற்றும் கோப்புகளை எளிதாய் இது படம் போட்டு காட்டும்.
உங்கள் ஹார்ட் டிரைவ் பயன்பாட்டை கண்காணிக்க இது நெஜமாலுமே ஒரு நல்ல மென்பொருள் தான்.
http://windirstat.info
இந்துமகேஷின் "மேனியைக்கொல்வாய்" குறுநாவல் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. InthuMahesh Meniyai Kolvaai short novel in Tamil pdf ebook Download. Right click and Save.
Download