Tuesday, July 22, 2008

ஹாய்போன்

ஐபோன் 3ஜி சந்தைக்கு வந்த வெள்ளி மறுநாளே நேகா ஒரு AT&T கடையைத் தேடிப்போய் தனக்கென ஒரு ஐபோனை முன்பதிவு செய்து வந்திருந்தாள். ஆப்பிள் நிறுவனத்திலிருந்து அந்த AT&T ஸ்டோருக்கு அவள் ஐபோன் வந்து சேர அதிக பட்சமாக இரண்டு வாரங்கள் ஆகும் என சொல்லியிருந்தார்கள். அன்றையிலிருந்தே மிக ஆர்வமாக காத்திருந்தாள் நேகா. இன்றைக்கு காலையில் பெடக்ஸ்(Fedex) வண்டியில் டெலிவரிக்காக அவள் ஐபோன் காத்திருப்பதாக அவர்கள் டிராக்கிங் சொல்லிற்று. கொஞ்ச நேரத்திலெல்லாம் AT&T கடையிலிருந்தே அவளுக்கு அழைப்பு வந்தது."உங்கள் ஐபோன் ரெடி மேடம்".

நேகாவின் டொயாட்டோ கேம்ரியில் கும்பலாய் இன்று மாலையில் கிளம்பினோம். அக்கம்பக்கம் AT&T களில் இல்லாமல் எங்கோ கொஞ்ச தூரத்திலிருந்த அந்த குறிப்பிட்ட iPhone 3G உள்ள AT&T ஸ்டோருக்கு செல்லவேண்டியிருந்தது. முன்கண்ணாடியில் அழுத்தி மாட்டியிருந்த கார்மின் ஜிபிஎஸ்(GPS) வேறு வழிகாட்டுவதை விட்டு விட்டு அவ்வப்போது டமால் டமால் என கீழே விழுந்து எரிச்சலூட்டிக்கொண்டிருந்தது. இது மாதிரி கண்ணாடியில் அழுத்தி மாட்டும் ஜிபிஎஸ்களில் இது ஒரு தொல்லை. அதுவும் இது கோடைகாலமாகையால் வெயிலில் காய்ந்து சீக்கிரமாய் பொத்பொத்தென விழுந்துவிடுகின்றது. கோபால் ஒரு ஐடியா சொன்னான். அந்த ஜிபிஎஸ்சின் கண்ணாடியில் ஒட்டும் பகுதியில் சிறிது தண்ணீர் தடவினால்
சிக்-கென ஒட்டிக்கொள்ளுமென. அப்படியே செய்தோம். அப்புறம் அந்த ஜிபிஎஸ் கீழே விழவே இல்லை.

8GB ஐபோன்3G-யின் விலை 199 டாலர்கள்
அப்புறம் 18 டாலர்கள் ஒருமுறை ஆக்டிவேசன் கட்டணமாக
அப்புறமாக வழக்கமான செல்போன் பில் கூட மாதம் தோறும் 30 டாலர்கள் எக்ஸ்ட்ராவாக டேட்டா பிளான்காக கட்டவேண்டும் - இது தான் ஒரு ஐபோன் வைத்திருக்கும் நேகாவுக்கு ஆகும் செலவுகள்.

ரோல் ஓவராகி சேர்த்து வைத்திருந்த நிமிடங்களெல்லாம் பிளான் அப்கிரேடு செய்ததில் போய் விட்டதில் அவளுக்கு சிறிது வருத்தமே.

மற்றபடி ஐபோன் ஒரு கூலான கைக்கணியாய் இருக்கின்றது. ஒரு துரிதப் பார்வையிட்டதில் கலக்கலாய் இருந்தது. உடனே அக்கம் பக்க Wi-Fi க்களை கண்டுபிடித்து அத்துடன் இணையட்டுமாவென கேட்கின்றது.அப்படி இணைந்தால் நல்ல வேகமான தகவல் பாய்வு கிடைப்பதால் வலை மேய்தல் மிக வேகமாக இருக்கின்றது. யூடியூப் வீடியோக்களை, உங்கள் போட்டோக்களை அப்படியே கிரிஸ்டல் கிளியராய் பார்க்க முடிகின்றது. MP3 பாடல்களை இறக்கம் செய்யாமலே கேட்க முடிகின்றது. தமிழ் பிடிஎப்-களையும் படிக்க முடிகின்றது. ஆனாலும் தமிழ் யூனிக்கோடு தளங்கள் இப்போதைக்கு அரைகுறையாய் தான் தெரிகின்றது. இன்னும் சில ஆய்வுகள் மேற்கொள்ள வேண்டும்.

அவ்வப்போது அதை அவளிடம் சுட்டு நான் கற்றவற்றை உங்களுக்கும் சொல்வேன்.

அமெரிக்காவில் நீங்கள் வேலை செய்யும் கம்பெனி அல்லது படிக்கும் கல்லூரியைப் பொறுத்து உங்களுக்கு AT&T செல்போன் பில்லில் கொஞ்சம் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இருக்கின்றது.கீழ்கண்ட சுட்டிபோய் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கொடுத்துபாருங்கள்.
Get Additional Savings through Your Employer or School!
https://www.wireless.att.com/business/authenticate/

சேரன் "உயிர் கொல்லும் வார்த்தைகள்" கட்டுரைகள் தொகுப்பு இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Cheran Yuir Kollum Vaarthaigal in Tamil pdf ebook Download. Right click and Save.Download