
முன்பெல்லாம் கணிணி பொட்டிக்குள் ஒரே ஒரு CPU மட்டுமே இருக்கும். அப்புறமாய் ஒன்றுக்கு இரண்டு சிபியூக்களை உள்ளே வைத்து அதை Dual-processor அல்லது two-way SMP என்றார்கள். பொதுவாக இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட சிபியூக்களை கணிப்பொறிகளில் பயன்படுத்துதல் செர்வர்களிலேயே வழக்கமாக இருந்து வந்தது. நாம் அப்படி என்ன பண்ணி கிழிக்கிறோமோ தெரியவில்லை, நாளுக்கு நாள் கணிணித்திறன் நமக்குகூட அதிகமாக தேவைப் பட்டுக் கொண்டே வருகின்றது. அதனால்தான் இன்றைய வீட்டுக்கணிணிகள் கூட ஒன்றுக்கு இரண்டு சிபியூக்களை கொண்டு வருகின்றன. ஆனாலும் இரண்டு தனித்தனி சிபியு சிப்புகளாய் இல்லாமல் ஒரே சிப்பில் இரண்டு சிபியூக்களும் அமர்ந்திருக்கும் வகையாய் வருகின்றன. இதைத் தான் டுவல்கோர் (Dual core) என்கின்றோம். பெரும்பாலும் Multithreaded பயன்பாடுகளே இதன் பலனை நமக்களிப்பதால் அதிக வித்தியாசம் ஒன்றும் நமக்கு தெரிவதில்லை. மற்றபடி வெறுமனே பிரவுஸ் செய்து சாட் செய்ய Quad core தான் (4 சிபியூ கோர்கள்) வேண்டுமென நாம் அடம்பிடித்தல் கொஞ்சம் ஓவர் தான்.
28 TB நினைவகத்தோடு கூடிய 14400 கோர்கள் உள்ள ஒரு கணிணி பற்றி கேள்விப் பட்டிருக்கின்றீர்களா? நம் ஊரின் சூப்பர் கம்யூட்டர்தாங்க அது. அதன் பெயர் EKA. புனேயிலுள்ளது. Tata Sons Limited-ன் Computational Research Laboratories-க்கு சொந்தமானது. இதிலுள்ள மின்சார கேபிள்கள் மட்டுமே 10கிமீ தூரத்துக்கு வருமாம். இது ஆசியாவின் சக்திவாய்ந்த முதல் சூப்பர்கணிணியாகும். உலக அளவில் இதற்கு நான்காவது இடம். யாகூ தனது cloud computing ஆய்வுக்கு இதை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
இவ்ளோ பெரிய கணிணியில் ஓடும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் என்னவென நினைக்கின்றீர்கள்?
அட நம்ம லினக்ஸ் தான்.
http://www.crlindia.com
லினக்ஸ் பயிற்சி பக்கங்கள் தமிழில். Linux Payirchikal in Tamil pdf ebook Download. Right click and Save.
Download