Tuesday, July 1, 2008

நின்று கொண்டிருப்பதை விட

நமது பிகேபி விக்கி மன்றம் தொடங்கி இன்றைக்கு சரியாக ஒரு மாதமாகியிருக்கிறது. நான் எதிர்பார்த்ததை விட அங்கு ஏகப்பட்ட சுறுசுறுப்பு.பின்னூட்டம் வழியாகவோ அல்லது மின்னஞ்சல் வழியாகவோ கேள்விகளை கேட்பது நிற்கப்பட்டு இப்போது அங்கு விவாதகளம் சூடாக இயங்கி வருகின்றது.நான் மட்டுமே பதிலளிப்பதில்லை நண்பர்களும் பதிலளிக்கின்றார்கள் என்பது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. ஏதோ கேள்வி பதிலென்றில்லாமல் தாங்கள் அறிய வந்த பல நல்ல விஷயங்களையும் நண்பர்கள் அங்கு பகிர்ந்து கொள்கின்றார்கள். ஒருத்தனை மட்டுமே நம்பி இராமல் ஒரு குழுவால் கிடைக்கும் பலம் தானே இன்றைய இணையத்தின் விசேசமே.

சவுதி அரேபியாவிலிருந்து G. ராஜாராமன் அவர்கள் "Splicing எனப்படும் fiber optical cable connecting செய்யும் வேலைக்கு சத்தமில்லாமல் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. இந்த வேலை வாய்ப்பு Telecomunication, Cell phone towers, மற்றும் அனைத்து தனியார் துறைகளிலும் இப்போது fiber optics use பண்ணுகிறார்கள்" என்று சொல்லி சென்றார்கள்.அப்போது தான் புரிந்தது இதுமாதிரியான அப்பட்டமான அதே வேளை நம் கண்ணுக்கு மறைந்திருக்கும் வேலை வாய்ப்புகள் அதிகம் என்று.

இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடைபெறும் IT/BPO Walkin களுக்கான வலைத்தளம் http://www.mywalkin.com என அறிமுகப்படுத்திய வேதன் -இவரை எனது வலைப்பதிவில் பார்த்ததில்லை. விக்கி மன்றத்தில் சும்மா விளாசி வருகின்றார். எனக்கு எட்டாத பல விஷயங்களையும் கூட இவர் சொல்வதுண்டு.எனது வலைப்பதிவில் தமிழ் நெஞ்சத்தில் பங்களிப்பு அபாரம் என்றால் விக்கிமன்றத்தில் வேதனின் பங்களிப்பு அபாரம் என்பேன்.நின்று கொண்டிருப்பதை விட சென்று கொண்டிருப்பது மேல் - என்ற கல்யாண்ஜியின் கவிதை வரியை நினைவு கூரும் அவர் தொடர்ந்து இயங்குவது மட்டுமே எப்போதும் முக்கியம் என்கின்றார் சாட்டை அடியாய்.

மேலும் பல தகவல்களை நான் அம்மன்றம் வழி அறியவந்தேன்.ரயில் Online booking ற்கு http://www.irctc.co.in ஐ அல்லது www.erail.in -ஐ அனுகலாமாம்.PNR Status - Other Enquiry ற்கு சிறப்பானது http://www.indianrail.gov.in -ஆம்.

http://icegate.gov.in Indian Customs ன் இணையதளம் இது. ஏற்றுமதி இறக்குமதி (Imports/Exports) செய்பவர்களும் அது சார்ந்த தொழில் தொடங்க விரும்புபவர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய முக்கிய வலை தளம் இது. Imports-Exports செய்யப்படும் Goods களை Customs language ல் bill என்கிறார்கள். இந்த Bill களை OnLine ல் எப்படி File செய்வது என்பதும், File செய்வதற்கு தேவையான RES (Remote EDI Systems) Package ம், முக்கியமான Documents,Country Code, Scheme Code ம் இங்கே கிடைக்கிறது.மேலும் Customs ற்கும் Importers/Exporters ற்கும் இடைத்தரகர்களாக செயல்படும் Customs House Agents (CHA) ஆக இருப்பவர்களும் அது சார்ந்த தொழில் தொழில் தொடங்க விரும்புபவர்களும், Cargo, Freight, Logistics காரர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய வலை தளம் இது.(CHA ஆக இருந்தால் செம காசுங்கோ….)

மேலும் Customsன் மாறும் Exchange Rate, Notifications களைத் தெரிந்து கொள்ள http://cbec.gov.in/
மற்றபடி….
http://ices.nic.in/
http://www.chennaicustoms.gov.in/
http://www.mumbaicustoms.gov.in/
http://dgft.delhi.nic.in/
களையும் பார்க்கலாம். இப்படி ஏகப்பட்ட தகவல்கள்(நன்றி வேதன்)

பயர்பாக்சின் கின்னஸ் சாதனை பற்றிய பதிவை நான் எழுதி வைத்திருந்தபோது எனக்கு முந்தி ராம்விபாகர் அவர்கள் அது பற்றிய செய்தியை நமது மன்றத்திலேயே வெளியிட்டு வியப்பூட்டினார்.
அது போலவே வீடுகளில் ஆபாச தளங்களை தடை செய்யும் கடிவாளம் பதிவை நான் எழுதி வைத்திருந்தபோது எனக்கு முந்தி அந்த மதுரைவாலா நண்பர் அது பற்றிய செய்தியை நமது மன்றத்தில் வெளியிட்டு இன்னும் வியப்பூட்டினார்.

வடிவேலன் அவர்கள் "நண்பர்களே மெகாஅப்லோடு, ராபிட்சேர் போன்ற தளத்தலிருந்து டவுன்லோடு பகலில் செய்யவும் ஏன் என்றால் அப்பொழுது அவர்கள் இந்தியாவாக இருந்தால் ஹேப்பி அவர் என்று இலவசமாக உடனே கொடுக்கிறார்கள் இல்லாவிடில் டைம்ஸ்லாட் 1 நிமிடம் பொறுத்திருக்க சொல்கிறார்கள்" என Rapidshare-ன் Happy hour-ஐ அறிமுகம் செய்து வைத்தார்கள்.ஆதாயம்-You don't need to wait for timer and enter captcha in
Happy Hours. ஆனால் அதே டவுன்லோட் லிமிட் இன்னும் இருக்குமாம்.இது ஹேப்பி அவரா என தெரிந்துகொள்ள இந்த மென்பொருளை பயன்படுத்தலாம். (இந்தியாவில் தினமும் காலை 5.30 மணிஅளவில் தொடங்குகிறதாக கேள்வி.)
http://rapidshare.com/files/112883634/RSHappyHourChecker.zip

Happychecker Firefox Addon
https://addons.mozilla.org/en-US/firefox/addon/7353

Tabbed ப்ரொவ்சிங் இப்போது பிரபலம்.எளிதாய் அந்த tab-களிடையே துள்ளிச் செல்ல Ctrl+Tab உபயோகப்படுத்துங்களென சொல்லிச் சென்றார் நண்பர் Kricons.

இப்படி தெரிந்துகொண்ட விஷயங்கள் ஏராளம்.

அந்த சுவிஸ் நண்பரின் சோனி மடிக்கணிணியை சரிசெய்ய இந்த மன்றம் வழி என்னால் உதவ முடிந்தது ஒரு சந்தோசமே.இது போல அநேக சிறு சிறு உதவிகள் பலருக்கும் பலர் மூலமாயும்.

நண்பர் K கேட்டிருந்தார்."குருவி தலையில் பனங்காய்-என் அன்பு பிகேபி சார் சில சமயம் கேள்வி கேட்கும் போது உங்களை நினைத்தால் பாவமாய் இருக்கிறது.புலிவாலை பிடித்து விட்டீர்கள்.ஒவ்வொரு கேள்விக்கும் பதில் எதிர்பார்ப்பார்கள், பதில் தராவிட்டால் மனம் பொக்கென்று போய்விடும்!!எப்படி சம்மாளிக்கிறீர்களோ தெரியவில்லை? இது முழுநேரவேலை ஆகிவிடுமே? எப்படி ஓடப்போகிறதோ காலம்? உங்கள் உற்சாகம் குறையாமல் இருக்க இன்று சாய் ராம் மகாராஜிடம் வேண்டுதல் செய்வேன்"என எழுதியிருந்தார்.

அதற்கு நான் "என்ன எளிதாய் குருவி தலையில் பனங்காய் என்றுவிட்டீர்கள்.உண்மையில் அது பாறாங்கல் என்றிருக்க வேண்டு்மாக்கும். :) எனக்கு தெரிந்ததை நண்பர்கள் கேட்கும் போது எளிதாய் பதில் சொல்லிவிடுகின்றேன். அதில் அவர் பெறும் மகிழ்ச்சியால் எனக்கும் மகிழ்ச்சியே. தெரியாததை கேட்கும் போது தான் வசமாய் மாட்டிவிடுகின்றேன்.நீங்கள் சொன்னமாதிரி அவர்களுக்கும் வருத்தமாகிவிடும்.எனக்கும் வருத்தமாகிவிடும்.
இப்படியே ஓடிக்கொண்டிருந்தாலே போதுமென்றிருக்கின்றேன். சில நண்பர்கள் கூட கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பது என்னை இரட்டிப்பு மகிழ்ச்சியாக்குகிறது. இதுவரை இப்படி நான் இயங்கிக் கொண்டிருக்க நண்பர்களின் ஒருமித்த ஆதரவுதான் முதல் காரணம். மற்றபடி இறைவனிடமும் நீங்கள் வேண்டிக்கொள்ளுங்கள். நானும் தான்."என பதிலளித்திருந்தேன்.

இப்படி தடையில்லாமல் ஓடிக்கொண்டிருக்க வேண்டுமென்பது தான் என் அவா.

அவர் சொன்ன இன்னொரு வார்த்தையும் நினைவுக்கு வருகின்றது "காரணமில்லாமல் எதுவும் கெடாது"

கணிப்பொறி அறிமுகம் தமிழில் பிடிஎப் பக்கங்கள். Introduction to Computer in Tamil pdf pages Download. Right click and Save.Download