Tuesday, March 25, 2008

மின்புத்தகங்கள் பற்றி

இணையம் இந்த சமூகத்தில் செய்த இன்னொரு மாயாஜாலம் எங்கோ ஏதோ ஒரு மூலையில் கிடந்த ஒரு சாதாரண கலைஞனையும் ஊர் தெரிய சந்திக்கு கொண்டு வந்தது தாம்.ஏற்கனவே புகழ் பெற்று உச்சியிலிருப்போர் காப்பிரைட் பற்றி கவலைப்பட சாதாரண கலைஞனுக்கு காப்பிரைட் பெரிதாய் படவில்லை. அடையவேண்டும் என் கைங் காரியங்கள் உலகமுழுக்க அடைய வேண்டுமென ஆசைபட்டான்.

எழுதுவோன் பிலாகில் எழுதித்தள்ளினான்.
நடிப்போன் யூடியூபில் நடித்துக்காட்டினான்.
பாடுவோன் பாட்காஸ்டாக பாடித் தள்ளினான்.

அநேக புள்ளிகள் இரவோடிரவாய் பிரபலமாயினர்.காப்பிரைட் பற்றி கவலைப்பட இது தருணமில்லை என அவர்களுக்கு தெரிந்தது. போகும் போக்கில் போக விட்டு ஒரு வீச்சை அடைந்த பின் கொக்கிபிடி போட அவர்கள் காத்திருக்கின்றனர். அது தான் சரியான தருணம் என அவர்களுக்கு தெரியும். அதுவே காசாக்கும் நிமிடமும் கூட.

இங்கு நாம் வெளியிடும் ஈபுத்தகங்களின் பிண்ணணியும் அது தான்.

யாரும் இங்கு வெளியாகும் ஈபுத்தகங்களை மணிக்கூர்கணக்கில் மானிட்டர் முன் உட்கார்ந்து படிக்க மாட்டார்கள் என்பது என் எண்ணம்.

அப்படியே புத்தக ஆர்வலர்கள் முதல் பத்து பக்கங்களை படித்ததும் ஆர்வம் மிஞ்சினால் அதை காகித புத்தகமாக வாங்கிப் படிக்கவே விரும்புவரே ஒழிய எத்தனை தமிழர்கள் இன்றைய நிலையில் சோனி ஈபுக்ரீடரோ அல்லது அமேசானின் கிண்டிலோவைத்துக்கொண்டு வலம் வருகின்றார்கள்?

ஆக இங்கு கொடுக்கப்படும் புத்தகங்கள் இணைய நண்பர்களுக்கு ஒரு அறிமுகமாக கொடுக்கப்படுகின்றதே ஒழிய பிறரின் காப்பிரைட்டை திருடவல்ல.

இதை உணர்ந்து "பாரா"முகமாய் இருப்பவர் பலர்.சிலர் வருத்தப்பட்டு தங்கள் புத்தகங்களை எனது தளத்திலிருந்து நீக்கவும் கேட்கின்றனர்.அவர்களின் மென்புத்தகங்களை உடனடியாய் நீக்கவும் செய்து விடுகின்றேன்.

இனிமேலும் யாராவது தனது புத்தகங்களை நீக்ககோரினால் உடனடியாக நீக்கம் செய்துவிடுவேன்.

இங்கு பாருங்கள்
திரு.கே.செல்வப்பெருமாள் போன்ற எழுத்தாளர்கள் என்ன சொல்கின்றார்கள் பாருங்கள்.
அவரது வார்த்தைகள் இதோ.

"அன்புள்ள பி.கே.பி.
என்னுடைய இ-புத்தகமான மே தினத்தை தங்களது தளத்தில் கொடுத்துள்ளமைக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகம் குறித்த கருத்துக்கள் ஏதாவது வந்தால் எனக்கு அதனை மெயில் செய்து உதவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்
கே. செல்வப்பெருமாள்
http://santhipu.blogspot.com
email: ksperumal@gmail.com, ksp_chennai@yahoo.co.in"


நன்றி செல்வப்பெருமாள் சார். உங்கள் "மேதினம்" புத்தகம் நிச்சயம் அநேகருக்கு உணர்வூட்டுதலாய் இருந்திருக்கும் என நம்புகின்றேன்.

சிலர் என்னிடம் கேட்டிருந்தார்கள்."நீங்கள் எப்படி இப்புத்தகங்களை PDF-ஆக மாற்றுகின்றீர்கள்?"

நான் இதுவரை எந்த ஒரு புத்தகத்தையும் ஈபுத்தகமாக ஸ்கான் செய்ததில்லை.அதற்கு சமயம் கிடைப்பதுவும் இல்லை.ஆங்காங்கே இணையத்தில் கிடைப்பவற்றை இங்கே தொகுத்தளிக்கின்றேன். அவ்வளவே.(இதில் நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் இணையத்தில் அங்குலம் விடாமல் தேடி கண்டுபிடித்தவைகளும் அதிகம் உண்டு.இந்நேரத்தில் அவருக்கும் என் நன்றிகளை சொல்ல கடமைபட்டுள்ளேன்.)

ரொம்ப ஆர்வமாய் நான் உருவாக்கிய ஒரே சிறு மென்புத்தகம் சிறுவர்களுக்கான தமிழ் ரைம்ஸ் மென்புத்தகம் மட்டுமே.

பல புத்தக காதலர்களும் அவற்றின் மேலுள்ள அளவுகடந்த ஆர்வத்தாலும் வெறியாலும் காலப்போக்கில் அழிந்து போகாதிருக்க ஒருவேளை அவற்றை ஸ்கான் செய்கின்றார்கள் போலும். இதனால் பிற நூல்விரும்பிகளும் பயனடைகின்றார்கள்.

"எனது முதல் கதை வெளியான அந்த சிவாஜி பத்திரிகையின் காப்பியை யாராவது ஒருவர் கொண்டு வந்து தந்தால் என் சொத்து முழுவதையுமே எழுதிகொடுப்பேன்" என ஓரு முறை எழுத்தாளர் சுஜாதா அவர்கள் சொன்னதாக எங்கோ படித்தேன்.

ஒருவேளை கணிணி அக்காலங்களில் இருந்திருந்தால் அப்பத்திரிகை ஸ்கேனாகி எங்காவது இருந்திருக்குமோ?

கொஞ்சம் சீரியசான பதிவு.அதனால் மேலே படங்கள் எல்லாம் ஒரு ரிலாக்ஸேசனுக்காக ஜோக்குகளாகிப் போயின.

இந்திய தேசிய கீதமான "ஜன கன மன" இங்கே Mp3 வடிவில உங்களுக்காக. Indian National Anthem Jana gana mana in Mp3 format. Right click and Save.Download