இந்த வைரஸ் ஸ்கேனர்கள் நெஜமாலுமே உருப்படியாய் வேலை செய்கின்றனவாவென எப்படி சோதித்து பார்ப்பது?.
அதற்காக எங்காவது இலவசமாய் வைரஸ்கள் இறக்கத்துக்கு கிடைக்குதாவென்று தேடவாவேண்டும்? இல்லை.இல்லவே இல்லை.
இங்கே இருக்கின்றது அதற்கொரு தீர்வு.ஆமாம் நீங்களே ஒரு சாம்பிள் வைரசை படைத்து உங்கள் கணிணியில் இட்டு உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் நன்றாக வேலை செய்கின்றதாவென ஒரு "பிட்மஸ்" சோதனை செய்து அறியலாம்.
நீங்கள் செய்ய வேண்டியதென்ன? கீழ்க்கண்ட "சுத்தமா நமக்கு ஒன்றுமே புரியாத" எழுத்துவரிசையை நோட்பேடால் புதிதாய் ஒரு டெக்ஸ்ட் கோப்பை திறந்து அதில் சேமியுங்கள்.அவ்ளோ தான்.
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
உங்கள் ஆன்டி வைரசு ஸ்கானர் "ரியல்டைம்" ஸ்கேனிங்கில் வல்லதுவெனில் உடனே இக்கோப்பை கண்டறிந்து உங்களை உசார்படுத்துவதோடு அதை அழித்தும்விடும். இன்னபிற ஸ்கானர்கள் கொஞ்ச நேரம் கழித்து ஸ்கான்பண்ணி வரும்வழியில் இக்கோப்பை கண்டால் "வைரசு இருக்கு டோய்"-னு அலறிவிடும்.
உண்மையில் இந்த Code வைரசோ அல்லது வேறெந்த பயப்படும் படியான விஷயமோ இல்லை.இந்த மாதிரி ஆண்டிவைரஸ் ஸ்கானர்களின் செயல்பாட்டை ஊர்ஜிதம் செய்ய அனைத்து ஆன்டிவைரசு ஸ்கானர் தயாரிப்பாளர்களும் இதை வைரசு போல பாவிக்க தங்களிடையே உடன்பாடு செய்திருக்கின்றார்களாம். மற்றபடி நான் ஒன்றும் ஹாக்கர் இல்லீங்கோ.
இந்த சாம்பிள் வைரசை கீழ்கண்ட சுட்டியிலிருந்தும் இறக்கம் செய்து கொள்ளலாம்.Try at your own risk.
http://www.eicar.org/anti_virus_test_file.htm
My 2 cents..thats all.
:)
