Wednesday, March 19, 2008

ட்ரோஜன் குதிரை பற்றிய கதை தெரியுமோ?

ஹாயாக இணையத்தை ஒரு சுற்று மேய்ந்து விட்டு, சில பல தெரிந்த தெரியாத மென்பொருள்களை விளையாட்டாக இறக்கம் செய்து இயக்கிவிட்டு தூங்கிப்போனீர்கள். திடீரென விழித்து பார்த்தால் உங்கள் கணிணி ஹார்ட்டிரைவ் லைட் மின்னி மின்னி பிஸியாக இருக்கின்றது.மோடம் லைட்டுகள் பலவாறாக மின்னிக் கொண்டே இருக்கின்றன. ஏதோ மர்மம் அங்கு நடப்பது போல் காட்டுகின்றது. நீங்கள் நினைப்பது போல் இது ஒரு சாதாரண விசயமில்லை. உங்கள் கணிணியில் என்னமோ அசாதாரணம் நடப்பதையே இது காட்டுகின்றது.உசாராக வேண்டிய தருணம் இது.Trojan Horse அல்லது மால்வேர் எனப்படும் மர்மமென்பொருள்கள் உங்கள் கணிணியிலிருந்து கொண்டே உங்களை பற்றிய தகவல்களை யாருக்கோ வழங்கி உங்கள் காலை வாரிக்கொண்டிருக்கலாம். எனவே இணைய இணைப்பை உடனே துண்டித்து நீங்கள் உங்கள் கணிணியை வைரஸ் ஸ்கேன் செய்தாக வேண்டும்.

அது சரி, இது மாதிரியான நமது கணிணியின் உள்ளிருந்தே நமக்கு உலைவைக்கும் மென்பொருள்களுக்கு ட்ரோஜன் ஹார்ஸ் என்று ஏன் பெயர் வந்தது தெரியுமா? அதற்கு சுவையான கதை ஒன்று உள்ளது.

கிரேக்க இதிகாசக் கதை ஒன்றின் படி, கிரேக்க தேசத்து அழகியான கெலனையும் அந்நாட்டின் செல்வங்களையும் ப்ரயம் மன்னனின் மகனான பாரீஸ் என்னும் இளவரசன் தன் ட்ரோஜன் நகருக்குக் கடத்திச் சென்றுவிட்டான். இதனால் கிரேக்கர்களுக்கும் ட்ரோஜனியர்களுக்கும் இடையே கடும் யுத்தம் வந்தது. 12 வருடங்கள் நீடித்த இப்போரை வெல்வதற்கு
கிரேக்கர்கள் ஓர் தந்திரத்தைக் கையாண்டனர். அடியில் சக்கரம் வைக்கப்பட்ட ஓர் பிரமாண்டமான மரக்குதிரையைச் செய்து அதன் வயிற்றுக்குள் போர்வீரர்களை நிறைத்து வைத்து அதைபோர்க்களத்துக்கு இழுத்துச் சென்றனராம். போர் நடந்து கொண்டிருந்தபோது கிரேக்கர், குதிரையைக் போர்களத்திலேயே விட்டு விட்டு தோற்றுப் போனவர்கள் போல் ஓடிவிட்டனர்.இதனைக்கண்ட ட்ரோஜன் வீரர்கள், கிரேக்கர்கள் தோற்றுப்போய்விட்டதாக நினைத்து குதிரையை தமது பாதுகாக்கப்பட்ட நகருக்குள் இழுத்துச் சென்று தமது வெற்றியை விமர்ச்சையாக கொண்டாடினர்.ஒரேயொரு குருட்டு மதகுரு மட்டும் அதன் உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது என்று கத்தினானாம். யாரும் அவன் பேச்சைச் சட்டை பண்ணவில்லை. குடியும் கூத்துமாக இரவு முழுவதுமாக கொண்டாடிய அவர்கள் தூக்கத்தில் வீழ்கையில் கிரேக்க வீரர்கள் குதிரையின் வயிற்றை விட்டு வெளியே வந்து ட்ரோஜன் வீரர்கள் அனைவரையும் கொன்று அந்நகரைத் தீவைத்து எரித்தனராம். கெலன் மீட்கப்பட்டு அவள் கணவன் மெனலசிடம் கொண்டு செல்லப்பட்டாள் என கதை செல்கின்றது.

ஆக கரு என்னவென்றால் நம் ஆன்டிவைரஸ் மென்பொருள்கள் "உள்ளே ஆபத்து ஒளிந்திருக்கிறது" என்று எப்பவாவது கத்தினால் உடனே நாம் உசாராக வேண்டுமாக்கும்.

மவுனம் வெல்லும் "நேரம் வரும்; அப்பொழுது, எங்களது மௌனம் மிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். இன்‹று, நீங்கள்Ÿ எங்கŸள் குரலை நெறிப்பதை விட" என அட்டகாசமாய் ஆரம்பிக்கிறது இந்த புத்தகம் கே.செல்வப்பெருமாள் "மேதினம்" நூல். இங்கே தமிழில் அந்நூல் சிறு மென் புத்தகமாக. K.Selvaperumal - May Day Dinam in Tamil pdf ebook Download. Right click and Save.Download