
எடுத்துகாட்டாக இன்றைய நிலையில் ஒரு ஐபி அட்ரசை எடுத்தால் அதன் அமைப்பு இவ்வாறு
இருக்கும்.
192.168.0.1.
உங்கள் கணிணிக்கு இப்போது இணையத்தில் என்ன ஐபி வழங்கப்பட்டுள்ளது என இங்கே சொடுக்கி தெரிந்து கொள்ளலாம்.(கூடவே உங்கள் இருப்பிடத்தையும் பிட்டு வைக்கிறது).இந்த மிகப் பழைய ஐபி முறையை IPv4 என்கிறார்கள்.
இதுவரைக்கும் அரசாண்டு வந்த இந்த ஐபிவடிவம்-4 க்கு இறுதிகாலம் வந்துவிட்டது.ஏனென்றால் இந்த முறைப்படி எத்தனை லட்சம் (அதாவது 4.3 பில்லியன்) கணிணிகளுக்கு ஐபி நம்பர்கள் கொடுக்க முடியுமோ அதையும் தாண்டி அளவுக்கு அதிகமான கணிணிகள் உலகில் வந்துவிட்டன.
இந்த ஐபி அட்ரெஸ் தட்டுப்பாட்டை போக்க வந்தது தான் IPv6.இப்போது வெளியாகும் அனைத்து ஆப்பரேட்டிங் சிஸ்டங்களும் IPv6- யை கொண்டே வருகின்றன.
சொல்லப்போனால் 2009-ல் 192.168.0.1 ரக ஐபி முறை முற்றிலும் இருக்கவே இருக்காது.அமெரிக்க அரசு தனது அரசாங்க நெட்வொர்க்கை 2008-முடிவுக்குள் முற்றிலும் IPv6 மயமாக்க கெடு விதித்துள்ளது.ஆக யாரும் இந்த IPv6 க்கு தப்பமுடியாது.
So Whats New In IPv6.
இதன் அமைப்பு சற்று வித்தியாசமாய் கோடானுகோடி கணிணிகளை கொள்ளும் அளவுக்கு
அமைக்கப்பட்டிருக்கிறது.அதாவது 340,000,000,000,000,000,000,000,000,000,000,000,000 கணிணிகளுக்கு ஐபி அட்ரஸ் வழங்கலாமாம்.
ஐபிv6-க்கு ஒரு எடுத்துகாட்டு
2016:0fe8::0000:0000:0000:1975:69bf.
அதாவது இவை HexaDecimal எண்கள்.
Browser url-ல் ஐபி அட்ரெஸ் நாம் வருங்காலத்தில் டைப்பும் போது இப்படியாக டைப்ப வேண்டியது வரும்
போர்ட் நம்பர் இல்லாமல்
http://[2016:0fe8::0000:0000:0000:1975:69bf]/
போர்ட் நம்பரோடு-இங்கு போர்ட் நம்பர் 443
http://[2016:0fe8::0000:0000:0000:1975:69bf]:443/
To Test IPv6 connectivity
http://ipv6-test.singnet.com.sg/cgi-bin/IPv6-Test
Already IPv6 Enabled Websites list
http://www.ipv6.org/v6-www.html
மேலும் தகவல்கள்
http://en.wikipedia.org/wiki/IPv6