Monday, December 18, 2006

உடைக்கப்பட்ட விண்டோஸ் விஸ்டா


யாராலும் உடைக்கவே முடியாது.எதுவுமே செய்யமுடியாது.பாதுகாப்பு விஷயங்களில் எல்லாவற்றையும் மிஞ்சிவிட்டோம் என்று நுண்மென்னால் (அதாங்க ஐ மீன் மைக்ரோசாப்ட்டால்,FireFox -ஐ நெருப்பு நரின்னும் போது Microsoft-ஐ நுண்மென் எனக் கூடாதா? :) )சொல்லி வெளியான விண்டோஸ் விஸ்டா-Windows Vista முற்றிலும் ஹாக்கர் ஜாம்பவான்களால் இன்று உடைக்கப்பட்டு நிற்கின்றது.

பொதுவாக விண்டோஸ் விஸ்டாவை ஆக்டிவேட் பண்ண இணையம் போய் இணையம் வழி மைக்ரோசாப்ட் செர்வர்களால் அவை ஆக்டிவேட் செய்யப்படும்.இது கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கடினமாய் இருக்கும் என்பதால் KMS (Key Management Service) எனப்படும் இந்தமாதிரி சிறு சிறு "விண்டோஸ் விஸ்டாவை ஆக்டிவேட் செய்யும் செர்வர்"களை மைக்ரோசாப்ட் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் கொடுக்க தீர்மானித்தது.அதில் வந்தது தான் வினை.

அந்த KMS செர்வெர் இமேஜ் இணையத் தெருவில் இன்று கொட்டிக்கிடக்கின்றது.
இந்த செர்வெரின் VMware இமேஜை torrent வழி இறக்கம் செய்து ஒரு VMware Player கொண்டு தற்காலிகமாக
அந்த இமேஜை ஓடவிட்டு உங்கள் விண்டோஸ் விஸ்டாவை நீங்களே ஆக்டிவேட் செய்து கொள்ளலாம்.என்னத்தை சொல்வது.

இங்கே நமக்கொரு சந்தேகம் இலவசமாய் விஸ்டாவை கொடுப்பதற்கு பதிலாய் இந்தமாதிரி வேலைகளை செய்தால் பிச்சிகிட்டு ஓடும் என தெரிந்தே மைக்ரோசாப்ட் செய்யும் மார்க்கெட்டிங் சதியா இல்லை உண்மையிலேயே கிராக் செய்யப்பட்டதா என தெரியவில்லை.
பின்ன என்னங்க சொல்வது.விண்டோஸ் விஸ்டா பற்றி கவலைப்படாத ஜந்துகளெல்லாம் இப்போது ஒரு DVD யை கையில் வைத்து கொண்டு அதை சந்தோசமாய் கிராக் பண்ணிவிட்டு பின்னர் ஆகா என்னா அருமை Windows Vista.Super graphics ya-ன்னு சொல்லிட்டு போறதுங்க.

Read More KMS Crack Activate Windows Vista

Microsoft.Windows.Vista.Local.Activation.Server-MelindaGates torrent which contains a spoofed KMS server VM image Windows vista pirate cracked