Tuesday, December 12, 2006

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்- A hit`s Profile



சந்திரமுகி-Chandramukhi

திரைப்படம்:சந்திரமுகி (2005)
இயக்கம்:பி.வாசு
பாடியவர்கள் : ஆஷா போஸ்லே,மது பால கிருஷ்ணா
இசை: வித்தியாசாகர்
நடிப்பு:ரஜினிகாந்த்,நயந்தாரா,பிரபு,ஜோதிகா
வரிகள்:வைரமுத்து

வரிகள்
கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிப் பேசக் கூடாதா
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா

கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம்
எல்லை மீறக் கூடாதா
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா

கண்ணில் ஓரழகு கையில் நூறழகு
உன்னால் பூமியழகே
உன்னில் நான் அழகு.என்னில் நீயழகு
நம்மால் யாவும் அழகே
கண்ணதாசன் பாடல்வரி போல
கொண்டகாதல் வாழும் நிலையாக
கம்பன் பாடிப்போன தமிழ் போல
இந்த நாளும் தேகம் நலமாக
மழை நீயாக வெயில் நானாக
வேளாண்மை நீ

கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிப்பேசக் கூடாதா
அந்தநேரம் அந்திநேரம்
அன்புத் தூறல் போடாதா

கொக்கிப்போடும் விழி கொத்திப்போகும் இதழ்
நித்தம் கோலமிடுமா
மக்கள் யாவரையும் அன்பால் ஆளுகின்ற
உன்னைப் போல வருமா
வெளிவேசம் போடத்தெரியாமல்
எனதாசை கூடத் தடுமாறும்
பல கோடிப்பேரின் அபிமானம் கொண்ட
காதல் ஏங்கும் எதிர்காலம் நீ என் நாடு நான் உன்னோடு
நீதானே இது


கொஞ்சநேரம் கொஞ்சநேரம்
கொஞ்சிபேசக் கூடாதா
அந்தநேரம் அந்திநேரம்
அன்பு தூறல் போடாதா

கொஞ்சும்நேரம் கொஞ்சும்நேரம்
எல்லைமீறக் கூடாதா
இந்தநேரம் இன்பநேரம்
இன்னும் கொஞ்சம் நீளாதா

Watch all Chandramukhi Video Songs Here

Download Chandramukhi MP3 Songs Here

RajiniKanth Tamil Chandramukhi Konja Neeram Koncha Neram Lyrics