
சில சமயங்களில் சின்னத் திரை தமிழ் தொடர் தீம் பாடல்கள் அர்த்தத்தோடு அழகாக ரசிக்கும் படியாக அமைந்து விடுவதும் உண்டு.அப்படியான பாடல்களில் ஒன்று "நம்பிக்கை" தொடரின் கீழ்கண்ட பாடல்.
கவிஞர் வைரமுத்துவின் வைர வரிகள் கீழே.
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் நாளை இல்லை
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை
நம்பிக்கை இல்லாமல் வாழ்வு இல்லை
நட்பு என்பதும் நம்பிக்கை
கற்பு என்பதும் நம்பிக்கை
முயற்சி என்பதும் நம்பிக்கை
நாம் மூச்சு விடுவது நம்பிக்கை
தலையை இழந்த அருகம் புல்லும்
தழைத்து வருவது நம்பிக்கை
அப்பா என்னும் உறவும் கூட
அம்மா கொடுத்த நம்பிக்கை
ஆண்டவன் என்னும் கற்பனை கூட
அச்சம் கொடுத்த நம்பிக்கை
அடுத்த வருடம் மழை வரும் என்பது
உழுவோர்க்கெல்லாம் நம்பிக்கை
அடுத்த தேர்தலில் ஆட்சி என்பது
அரசியல்வாதியின் நம்பிக்கை
தரைக்கு மேலே பாதம் நிற்பதும்
ஆகாயத்தில் நிலவு நிற்பதும்
எல்லைக்குள்ளே கடல்கள் இருப்பதும்
இதயகூட்டில் ஜீவன் இருப்பதும்
நம்பிக்கை நம்பிக்கை
அது நம்பிக்கை நம்பிக்கை
இது போன்ற அநேக பழைய புதிய தமிழ் தொலைக்காட்சி தொடர்களின் பாடல்களை இங்கே கேட்டு மகிழலாம்.(Please note-You need Real Media Player installed in your computer)
http://raretfm.mayyam.com/rmlist.php?dir=tvserial
Tamil TV serial theme songs nambikkai lyrics