
சென்னை மாதவரம் வீட்டிலுள்ள டிவியில் நீங்கள் என்னவெல்லாம் சேனல்கள் பார்க்கமுடியுமோ அவற்றையெல்லாம் இப்போது நீங்கள் சிக்காகோ பிரின்ஸ்டன் அவென்யூவிலுள்ள உங்கள் வீட்டிலிருந்தும் பார்க்கலாமாம்.எப்படி இது சாத்தியம்.என்னவெல்லாம் தேவை இதற்கு?.
இந்தியாவில் தேவையானது ஒரு டிவி,கேபிள் இணைப்பு மற்றும் நல்ல இணைய இணைப்பு.சிக்காகோவில் தேவையானது நல்ல இணைய இணைப்பும் கணிணியும்.$149-க்கு கிடைக்கும் HAVA unit எனும் இக்கருவியை இந்திய வீட்டு டிவியில் முறைப்படி இணைத்துவிட்டால் சிக்காகோவிலிருந்து உங்கள் கணிணி/இணையம் வழி அந்த சென்னை டிவியை பார்க்கலாம்.(Hava மென்பொருள் நிறுவியிருக்க வேண்டும்).ஏறக்குறைய அனைத்து சேனல்களையும்.எந்தஅமெரிக்க டிவி சந்தாதார கணக்கும் இல்லாமல் பார்க்கலாம்.மேலும் Tivo போல் நிகழ்ச்சிகளை சேமித்து வைத்து பிற்பாடு பார்க்கும் வசதியும் இதில் உண்டு என்கிறார்கள்.டெக்னாலஜி துள்ளியோடிக்கொண்டிருக்கிறது.
http://www.snappymultimedia.com/products_hava_hd_pro.htm
Watch Indian Local Tv Channels from USA and worl wide Remote Viewing Over The Internet