
உலகின் சூப்பர் ஹிட் வலைப்பூக்களில் (Blog) ஒன்று பெரேஸ் கில்டன் வலைப்பூ.மரியோ லாவன்டிரா (Mario Lavandeira),எனும் இந்த 28 வயது இளைஞரின் இணைய வலைப்பூக்கு படிக்க ஒரு நாளில் வருவோரின் எண்ணிக்கை என்ன தெரியுமா?. 30 லட்சம்.உலக புகழ்பெற்ற ஆங்கில திரை உலகமாகிய ஹாலிவுட் பிரபலங்கள் பற்றிய கிசுகிசுக்கள் மற்றும் சர்ச்சைக்கிடையான படங்களை
வெளியிட்டே இந்த பிளாகு சக்கை போடு போட்டுக்கொண்டிருக்கிறது.
இந்த வலைப்பூ முழுக்க முழக்க அவராலேயே எழுதப்படுகிறதாம்.தினமும் சராசரியாய் 25 பதிவுகள் வேறு.ஆனால் ஆள் நன்றாக காசு பண்ணிக்கொண்டிருக்கிறார்.150x200 Pixel விளம்பரம் ஒன்று இவர் வலைப்பூவில் ஒரு வாரம் ஓட விட ஏறக்குறைய 4 லட்சம் ரூபாய் கொடுக்க வேண்டும்.சராசரியாய் தினமும் 12 லட்ச ரூபாய் பண்ணுவது போல் தெரிகின்றது.இதுவரை மொத்தம் 7000 பதிவுகள் இட்டுள்ளாராம்.அதில் சுமார் ஐந்து லட்சம் பின்னூட்டங்கள். மூச்சுவாங்குகிறது.இத்தனைக்கும் இவருக்கென்று ஒரு நிரூபர் கூட கிடையாதாம்.
இப்போதோ அவர் இன்னொரு காப்பிரைட் சிக்கலில் மாட்டி இன்னும் பிரபலமாகிக் கொண்டிருக்கிறார்.