Wednesday, June 25, 2008

பயனர் கையேடுகள்

ஆயிரத்து ஐநூறு டாலர்கள் கொடுத்து Sony Bravo 40" HDTV ஒன்றை வாங்கி நடுஅறையில் பெருமையாய் வைத்திருப்போம். வழக்கம் போல அதன் ரிமோட் உங்கள் வீட்டுகுட்டிப் பாப்பாவின் பொம்மையாகிவிடும். மாறிமாறி இரு பொத்தான்களை அது அமுக்க அப்புறம் அந்த அழகான உங்கள் பிளாட் ஸ்கிரீன் டிவி கோணல் மாணலாய் அல்லது ஒடுங்கி தெரியத் தொடங்கிவிடும். இதை எப்படி சரி செய்வது? தேடு தேடு அதோடு வந்த யூசர்கைடை தேடு அட எங்கப்பா அந்த யூசர்கைடு?

ஹாண்டா பைலட் வேன், அதன் டேஷ்போர்டில் விவகாரமாய் ஒரு குறி தோன்றி பயமுறுத்தும். அப்போது தான் அக்குறியின் அர்த்தம் அறிய வேனோடு வந்த அந்த பயனர்கையேடை தேடுவோம்.அட அந்த யூசர்கைடு எங்கப்பா?

இப்படி அநேக மின்ணணுசார் உபயோகப்பொருட்களின் யூசர் மானுவல்கள் ஆரம்பத்திலேயே வீடுகளில் எறியப்பட்டு விடுவதால் தேடப்படும் போது கிடைப்பதில்லை. இருக்கும் போது அது தேவைப்படுவது இல்லை..ஆமாம். ஆனால் இங்கு ஒரு தளத்தை பாருங்கள்.ஏறக்குறைய எல்லா user guides மற்றும் manual-களையும் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றார்கள். 800,000-க்கும் அதிகமான வீட்டு உபயோகப்பொருட்களின் User Guides-கள் இங்கு இணையேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன.

உங்களுக்கு ஏதாவது user manual தேவையெனில் வீட்டு அட்டைப்பெட்டிகளில் தேடிப்பார்ப்பதை விட இந்த தளத்தில் முதலில் தேடிப்பார்க்கலாம்.

http://safemanuals.com

(மின்னஞ்சல் வழி என்னை வாசிக்கும் நண்பர்களுக்கு ஏனோ எனது கடந்த இரு பதிவுகளும் கிடைக்க வில்லை.அவற்றை படிக்க இதோ அவற்றின் சுட்டிகள்.
கடிவாளங்கள்
நடந்து பாருங்கள் உலகம் மிகப்பெரியது
மற்றபடி கடவுளின் புண்ணியத்தில் நான் நலமே.நன்றி ரிஷான்,நன்றி அதிரை)

தா.பாலகணேசன் "வர்ணங்கள் கரைந்த வெளி" கவிதைகள் இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Varnankal Karaintha Veli Tamil Poems T. Balaganeshan kavithaikal in pdf ebook Download. Right click and Save.Download