ஆன்லைனிலும் உள்ளது பழைய மென்பொருள்களுக்கான காயலான் கடை. ஆனால் இலவசமாய். முன்பு கன்னாபின்னாவென பயன்படுத்தப்பட்டு இப்போது சுத்தமாய் நாம் மறந்து போன பல மென்பொருள்களை இங்கே கொட்டி வைத்திருக்கின்றார்கள். சும்மா தேவைப்பட்டால் போய் இறக்கம் செய்து நிறுவி கொஞ்சம் அந்தகாலத்துக்குப் போய் வரலாம்.
http://www.vetusware.com
அது போல பழைய டாஸ் கேம்களையும் இங்கே ஒரு ரசிகர் சேர்த்துவைத்திருக்கின்றார். அக்கால விருப்புக்களை தேடி ஆடி மகிழலாம்.
http://abandonia.com
வந்த பாதையை திரும்பிப்பார்த்தல் அது ஒரு இன்டரஸ்டிங் தான். இல்லையா?. வாழ்க்கையே வெங்காயம் போன்றது. ஒவ்வொரு ஏடாய் எடுத்துக் கொண்டே வாருங்கள். சில பொழுது கண்களில் நீர் வடியும். நிற்க.
இங்கே வழக்கமான ஒரு பிரச்சனை வரும். டாஸ் பயன்பாடுகளும் டாஸ் கேம்களும் இன்றைய கணிணிகளில் ஓடாதே என்பது தான். அதற்கு தீர்வாகத்தான் வந்திருக்கின்றது dosbox . இந்த இலவச பயன்பாடு உங்கள் பழைய Dos கேம்களையும் அப்ளிகேசன்களையும் எந்த கணிணியிலும் ஆட ஓட விடுகின்றது.முயன்று பாருங்கள்.
http://www.dosbox.com
ஒரு நிமிஷம்... இறக்கம் செய்யும் மென்பொருள்களை வைரஸ் சோதனை செய்து கொள்ளல் நல்லது அல்லவா? http://virusscan.jotti.org அல்லது http://www.virustotal.com போய் இறக்கம் செய்த அந்த பழைய மென்பொருள்களை இலவசமாய் ஒரு வைரஸ் செக்கப் செய்துகொள்ளல் உங்கள் கணிணிக்கு எப்போதுமே ஆரோக்கியம்.
அப்போ வரட்டா?

இஸ்லாமிய புத்தகம் சஹீஹீல் புகாரி இங்கே தமிழில் சிறு மென் புத்தகமாக. Islamic book Sahihi Buhari in Tamil pdf ebook Download. Right click and Save.Download