நீங்கள் மடிக்கணிணி அல்லது தட்டை திரை கணிணி வைத்திருக்கின்றீர்களா? உங்கள் OS வின்டோஸ் XP-யா? அப்போ கீழ்கண்ட தகவல் உங்களுக்கு உதவியாய் இருக்கும்.
பொதுவாய் மடிக்கணிணியில் அல்லது ப்ளாட் ஸ்கிரீன் கணிணியில் வின்டோஸ் XP வைத்திருப்போர், தங்கள் திரையில் கீழ்கண்ட படத்தின் இடது புறத்தில் உள்ளவாறு எழுத்துகள் ஒல்லிக்குச்சியாய் தெளிவாய் தெரிவதில்லை. அதை வலப்பக்கத்திலுள்ள எழுத்துக்கள் போல் தெளிவாய் மாற்ற நீங்கள் உங்கள் வின்டோஸ் XP-யில் ClearType தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும். இதனால் எழுத்துகள் மடிக்கணிணியில் அல்லது ப்ளாட் ஸ்கிரீனில் தெளிவாய் கூலாய் தெரிவதோடு உங்களின் வாசிக்கும் வேகமும் வசதியும் அதிகமாகுமாம்.

ClearType தொழில்நுட்பத்தை எப்படி கொண்டுவருவது.
இரண்டு வழிகள்
1.இணையத்தில் நீங்கள் இணைந்திருக்கும் போது ஆன்லைனிலேயே ஆக்டிவேட் செய்யலாம்.அதற்கு கீழ்கண்ட சுட்டியை சொடுக்கவும்.
http://www.microsoft.com/typography/cleartype/tuner/1.htm
அது வேலைக்காகா விட்டால் கீழ்கண்ட சுட்டியிலிருந்து ClearType Tuner PowerToy-யை இறக்கம் செய்து அதை நிறுவி கன்ட்ரோல் பேனல் ClearType ஐகானை சொடுக்கி Wizard வழி ஆக்டிவேட் செய்யலாம்.
http://www.microsoft.com/typography/ClearTypePowerToy.mspx
ரொம்ப எளிது. கணிணியே கதியென எட்டு மணிநேரமாய் தட்டைதிரை முன் இருப்போர்க்கு நிச்சயமாய் இது உதவும்.

ஜே.பெருமாள் "Windows XP துவக்க வழிகாட்டி" தமிழில் மென்புத்தகம் J.Perumal Windows XP Guide in Tamil e book Download. Right click and Save.Download