Friday, January 25, 2008

படம் சுட்டு கதை கட்டு

இனிமேலும் புகைக்காத முன்னாள் "புகைவண்டி"யை இப்போது "தொடர்வண்டி" என்கின்றோம். டிஜிட்டல் கேமராக்கள் முலம் உருவாகும் படங்களை இனிமேலும் புகைப்படங்கள் எனலாமா?.தெரியவில்லை. அதற்கொரு வார்த்தை இருப்பின் நண்பர்கள் தெரிவிக்கலாம்.

நம் விசயத்துக்கு வருவோம்.

பிறந்த நாள் விழாவாகட்டும், வளைகாப்பு விழாவாகட்டும் அல்லது வீட்டில் ஏதோ ஒரு குடும்ப விழாவாகட்டும். வரவேற்பறை தொலைக்காட்சிபெட்டியில் சீரியல்களை ஓட விடுவதைவிட அதை ஆப் செய்து போடுதல் நன்று.

ஆனால் அதை ஆப் செய்து போடுவதை விட அதில் குடும்பம்/நண்பர்கள் புடைசூழ முன்பு எடுக்கப்பட்ட புகைப்படங்களை/ டிஜிட்டல் படங்களை இன்னிசை பிண்ணணியோடு ஸ்லைடு ஸோ-வாக அதில் ஓட விடல் மிகவும் நன்று. பழைய சுவாரஸ்ய நினைவுகள் நிகழ்வுகள் நண்பர்கள், உறவினர்களை மகிழ்விப்பதாயும், நெகிழ்ச்சியூட்டுவதாயும் எல்லாரையும் கொஞ்சநேரம் கலகலவென சிரித்து பேச வைப்பதாகவும் இருக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட போட்டோக்களை அழகாய் தொகுத்து யாரையும் புண்படுத்தா கிண்டல் வார்த்தைகளை எழுதி அல்லது பிண்ணணியில் நகைச்சுவையாய் குரல் கொடுத்து அந்த ஸ்லைடு ஷோ வை இன்னும் மெருகூட்டி ஓட விடலாம்.

இப்படி ஒரு குடும்ப ஸ்லைடு ஷோ புராஜெக்ட் செய்ய விருப்பமா? இலவசமாய் மைக்ரோசாப்ட் அளிக்கிறது போட்டோ ஸ்டோரி (Microsoft Photo Story 3 for Windows XP) எனும் மென்பொருள்.இம்மென்பொருளை இறக்கம் செய்து நிறுவி ஓட விடுங்கள்.எளிதாய் இம்மாதிரி இசையோடு கூடிய புகைப்பட ஓட்டத்தை படைக்கலாம். வேண்டுமானால் போட்டோக்களோடே இடைஇடையே சிறுசிறு வீடியோக்களையும் செருகலாம் என்பது கூடுதல் வசதி.

Download Photo Story here

இல்லை இந்த மாதிரி ஸ்லைடு ஷோ அல்லாமல் மொத்தமாய் ஒரு வீடியோ காட்சி அல்லது டாக்குமெண்டரி எளிதாய் உருவாக்க மைக்ரோசாப்டின் இலவச விண்டோஸ் மூவி மேக்கரை முயலலாம்.

Download Windows Movie Maker

அது மாதிரி உருவாக்கிய ஒரு ஸ்லைடு ஷோ தான் நீங்கள் கீழே காணும் "தமிழறிஞர்கள் சிலர்"ஸ்லைடு ஷோ.மின்னஞ்சல் வழி படிப்போர் கீழ்கண்ட சுட்டியை சுட்டவும்
Tamil Arijarkal Slide Show made by Photo Story 3




"அடோபி போட்டோ ஷாப்" தமிழில் மென்புத்தகம் Adobe Photo Shop in Tamil pdf e-book Download. Right click and Save.Download