Wednesday, January 9, 2008

தேடிவரும் ஏமாற்று லாட்டரி மின்னஞ்சல்கள்

இப்படியாக எப்போதாவது Microsoft-டிடமிருந்தோ அல்லது Yahoo போன்ற பிரபல கம்பெனிகளிடமிருந்தோ உங்களுக்கு மெயில் வந்திருக்கின்றதா?

"Your email address have just won a Yahoo cum Windows live prize money of (ONE MILLION BRITISH POUNDS STERLING) (GBP£1,000,000.00) today 9th of January,2008.

Award winners emerge through random selection of all active email subscribers online. Six are selected monthly to benefit from this promotion.
This Prize Award must be claimed in not later than 15 days from date of draw notification after which unclaimed prizes are cancelled."

எப்படி இருக்குது இது?

அல்லது நைஜீரியாவிலிருந்து யாரோ ஒரு மில்லியன் டாலருக்கு சொந்தக்காரர் உங்கள் உதவி வேண்டி ஈமெயில் வழி தொடர்புகொள்கின்றாரா? .உஷார்... உஷார்..

ஈஸியா பணம் கிடைக்குதேவென ஏமாறுபவர்கள் இதில் ஏராளம்.எப்படி?

ஏதோ ஒரு இணையதளத்திலிருந்து உங்கள் ஈமெயில் ஐடி கண்டெடுக்கப்பட்டு சில ஏமாற்றுகாரர்கள் உங்களுக்கு ஈமெயில் வழி வலைவிரிப்பார்கள். அல்லது George@yahoo.com எனப் பொதுப்பெயர் மெயில் ஐடிகளுக்கு இம்மாதிரியான
மெயில்களை அனுப்புவார்கள். George@yahoo.com என ஒருவர் இல்லாமலா போய்விடுவார்?

இந்த மோசடியில் பலரும் மாட்டுவது எப்படி?

லாட்டரியில் வெற்றி பெற்ற பணத்தை அல்லது நைஜீரிய வங்கியிலிருந்து மீட்கப்பட்ட பணத்தை பெற முதலாவது Identification-காக உங்கள் பாஸ்போர்ட் காப்பியை அனுப்பச் சொல்வார்கள். அவ்ளோதான் உங்கள் தனிப்பட்ட தகவல்கள்
திருடப்பட்டு விட்டன. யார் வேண்டுமானாலும் இப்போது தன்னை உங்களைப் போல் போர்ஜரி செய்து கொள்ளலாம்.

இரண்டாவது அந்த வெற்றிபெற்ற பணத்தை பெற ஒரு Transaction fee தொடக்கத்தில் கட்ட வேண்டும் என்பார்கள். நீங்கள் அப்பாவியாய் கட்டுவீர்கள். பின் அந்த பணத்துக்கான வரியை முதலிலேயே அரசாங்கத்திடம் செலுத்த வேண்டும் என சில டாலர்கள் உங்களிடமிருந்து பிடுங்குவார்கள். பின் அப்பணம் ஒரு குறிப்பிட்ட வங்கியில் தான் டெப்பாசிட் செய்யப்படும்.எனவே அந்த பேங்கில் தயவு செய்து ஒரு அக்கவுண்ட் திறவுங்கள் என்பார்கள். அந்த வங்கியில் கணக்கு திறக்க குறைந்தது $3000 போட வேண்டும் என நிபந்தனை வேறு இருக்கும். கடைசியில் தான் உணர்வீர்கள் அது ஒரு பிராடு ஆன்லைன் வங்கி என.

ஈஸி பணம் என என்றுமே சாத்தியம் இல்லை. எந்த ஒரு தனிநபரும் அல்லது எந்த ஒரு நிறுவனமும் மில்லியன் டாலர்களை வாரி வாரி வழங்கவும் தயாரில்லை. வாங்காத லாட்டரி உங்களுக்கு எப்படி விழும்.பேராசையால் ஏமாறாமல் இருக்க இங்கே இது ஒரு எச்சரிக்கை மணி.

இம்மாதிரி மெயில்களையெல்லாம் நம்பி ஏமாந்து பணத்தை இழந்து தனக்குள்ளே புழங்கி வெட்கப்பட்டு யாரிடமும் வாய் திறந்து சொல்லாதிருப்போர் எண்ணிக்கை தான் இங்கு அதிகம்.

சிங்கப்பூரிலிருந்து நண்பர் சங்கர் இது பற்றி விசாரித்ததால் இதை ஒரு பதிவாய் போட வேண்டியதாயிற்றுது.நன்றி சங்கர்.

மேலும் தகவல்களுக்கு

http://www.fraudwatchinternational.com/lottery/


"நேற்றைய கல்லறை" கிருட்டிண மூர்த்தியின் மர்மக்கதை மென்புத்தகம் Mohan Krishnamoorthy "Naetraiya Kallarai" Novel pdf Tamil e-book Download. Right click and Save.Download