Friday, January 4, 2008

யூடியூப் வீடியோக்களை VCD-யாக்கலாம்

வித விதமாக பயனுள்ள மற்றும் குப்பை வீடியோக்களால் நிரப்பபட்டுள்ள Youtube.com தளத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் போது எதேச்சையாக கண்ணில் பட்டது Baa Baa Black Sheep வீடியோ பாடல். அழகான வண்ணமயமான கார்டூன் கிராபிக்ஸில் இன்னிசை மற்றும் பாடல் வரிகளோடு நம் எஞ்சினியர்கள் அதை படைத்திருக்கின்றார்கள். இது போல Rain Rain go away யிலிருந்து Hot cross bun வழி Solomon Grundy வரைக்கும் குழந்தைகளின் அனைத்து நர்சரி பாடல்களும் ஒலி/ஒளி வடிவில் இந்த யூடியூப் தளத்திலுள்ளது.என்ன கொஞ்சம் தேட வேண்டும்.

இங்கே கிளிக்கி பாருங்கள் சில சாம்பிள்களை.
Youtube Nursery Rhymes Collection 1
Youtube Nursery Rhymes Collection 2
Youtube Nursery Rhymes Collection 3

ஆமா ஆன்லைனில் இருக்கும் இந்த குழந்தைகள் பாடல்களை எப்படி குழந்தைகளைப் போய் சேர்க்க? அவர்கள் இணையத்திலா நம்மைப்போல் குந்திக்கிட்டிருக்கிறார்கள். :)

அதற்கு ஒரு வழி உள்ளது. இவ்வீடியோக்களை வீடியோ சிடி (Video CD)ஆக்கி டிவியில் ஓட விட்டால்..?

எப்படி?
1.முதலில் இந்த Flash வீடியோக்களை இறக்கம் செய்ய வேண்டும.இதற்கு Real Player உதவலாம். அது பற்றி விளக்கமாய் இங்கே படிக்கலாம். இக்கோப்புகள் .flv வடிவில் இறக்கமாகும்.

2.பின் இந்த .flv கோப்புகளை .mpg எனும் VCD Compliant வடிவில் மாற்ற வேண்டும். இதற்கு இந்த இலவச Super மென் பொருள் உதவலாம்.இம்மென்பொருள் பல .flv கோப்புகளை ஒரே மூச்சில் .mpg யாக மாற்றும்.

ஒவ்வொன்றாய் .mpg-க்கு மாற்ற அல்லது இந்த யூடியூப் வீடியோக்களிலிருந்து ஆடியோவை மட்டும் உறிந்தெடுத்து MP3 ஆக மாற்ற Amaze Flv Converter எனும் இலவச மென்பொருள் உதவலாம்.

3.கடைசியாய் உங்கள் கணிணியிலுள்ள Sonic அல்லது Nero CD Burner கொண்டு அந்த .mpg களை VCD-யாய் எரிக்க வேண்டியதுதான்.


லேனா தமிழ்வாணனின் "நீங்கள் ஓர் ஒரு நிமிட சாதனையாளர்" மென்புத்தகம் Lena Tamilvaanan Neengal Oor Oru Nimida Saathanaiyaalar pdf Tamil e-book Download. Right click and Save.http://static.scribd.com/docs/3s74g6o8yhuio.pdf
நன்றி தமிழ் நெஞ்சம்!!