
ஆனாலும் இன்னும் சில தளங்களில் பழைய ஏதாவதொரு எழுத்துருவை பயன்படுத்தி வருகின்றார்கள் (Like Bamini,Anjal etc). அப்படிப்பட்ட தளம் பக்கம் நீங்கள் வந்தால் அத்தள எழுத்துக்கள் உங்களுக்கு கோணக்க மாணக்க வென மேற்கண்ட படத்திலுள்ளது போல் தோன்றும். அச்சமயத்தில் இரு தீர்வுகள் உள்ளன்.
ஒன்று -அத்தளத்தில் பரிந்துரை செய்யப்பட்ட குறிப்பிட்ட தமிழ் எழுத்துரு-வை நீங்கள் உங்கள் கணிணியில் இறக்கம் செய்து நிறுவ வேண்டும். இதன் மூலம் அந்த முழு தளத்தையும் தமிழில் படிக்கலாம்.என்ன கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
அல்லது அவசரத்துக்காக அப்பக்கத்தை மட்டும் தமிழில் படிக்க அந்த மொத்த பக்கத்தையும் காப்பி செய்து அப்புறமாய் அதை கீழ்கண்ட எழுத்துரு மாற்றியில் பேஸ்ட் செய்து படிக்கலாம். ஒருவேளை படிக்க இயலாவிட்டால் ஒவ்வொரு எழுத்துருவாய் முயன்று பாருங்கள். அந்த படிக்க இயலா கோணல் எழுத்துரு அழகாய் படிக்க இயலும் யூனிக்கோடு எழுத்துருவாய் உங்களுக்கு இங்கு மாற்றி தரப்படும்.அத்தளத்தில் எந்த குறிப்பிட்ட எழுத்துரு பயன் படுத்துகிறார்கள் எனவும் இதன் வழி அறிந்து கொள்ளலாம்.
Tamil Font Converters
http://www.suratha.com/reader.htm
http://sarma.co.in/FConversion/
