
காரில் FM Radio மட்டும் உள்ளோர் MP3-யை நினைத்துக்கூட பார்க்கமுடியாது.காரில் FM Radio மற்றும்
Audio CD Player உள்ளோர் தினம் புதுசு புதுசா CD எழுதிகொண்டேயிருக்க வேண்டியது தான்.நேர விரயம்.காரில் FM Radio மற்றும் MP3,Audio CD Player உள்ளோர் கூட அடிக்கடி CD எரிக்க வேண்டியுள்ளது.கூடவே டன் டன்னாய் CD களை வைத்திருக்க வேண்டும்.உராய்வுகளிலிருந்து அவைதனை பாதுகாக்க வேண்டும்.இதிலிருந்தெல்லாம் தப்பிக்க ஒரு வழி.ஸ்க்ருடிரைவரின்றி எதையும் திறக்காமல் பிளக்காமல் உங்கள் கார் FM Radio-வை MP3 Player-ஆக்கலாம்.எப்படி? தேவையானவை ஒரு ஐபாட் Ipod ($99 முதல் $250வரை) மற்றும் ஒரு FM Transmitter ($15 முதல் $85 வரை).MP3 பாடல்கள்,பாட்காஸ்ட்கள்,உரைகளை அப்பப்போ ஐபாடில் காப்பி பண்ணி காரில் ஓடவிடலாம்.ஐபாட் பாடும் பாடலை FM Transmitter-ஆனது வயர்லெஸ் வழியாக கார் FM Radio வுக்குஒரு குறிப்பிட்ட அலைவரிசையில் செலுத்திகொண்டேயிருக்கும்.அதாவது ஐபாடு பாடும் பாடலை FM Radio-வில் கேட்கலாம்.CD தொல்லைகள் இனி இல்லை.வீட்டிலுள்ள FM Radio-வில் கூட இந்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஒரு தொழில்நுட்பத்தை இன்னொரு தொழில் நுட்பம் விழுங்குவதைப் பாருங்கள்.நிற்காமல் ஓடிக் கொண்டேயிருக்க வேண்டும்.