Thursday, January 8, 2009

கடவுள் எதற்கு?

மந்தமான பொருளாதாரமும் குறைந்துவரும் வேலைவாய்ப்புகளும் ஆலயங்களையும் கோவில்களையும் நிரப்பியிருக்கின்றன. வருகின்றவர்களெல்லாம் மனுக்களோடு வருகின்றார்கள். இறைவனின் இன்பாக்ஸ் இப்போதைக்கு ஃபுல். ஒரே ஒரு ஆறுதல் விவாகரத்துக்கு விரையும் தம்பதிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாம்.பின்னே இருக்கின்ற விலைவாசியில் யாருக்கு அது கட்டுபடியாகும்? கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

சகல தொல்லைகளுக்கும் காரணம் இந்த கடவுள் தான். அவனை ஒரேயடியாக விட்டுதொலைத்தால் என்ன என யோசித்த சிலர் கங்கணம் கட்டிக்கொண்டு "நல்லவனாய் இரு. கடவுள் எதற்கு" என்ற கோஷத்துடன் கிளம்பியிருக்கின்றார்கள். வாஷிங்டனிலும் லண்டனிலும் போஸ்டர்கள் நாத்திகம் பேசுகின்றன. அப்படியாவது ஒரு யுட்டோபியா கிட்டாதா என்ற நம்பிக்கையில்.

யூனிவர்ஸ் என்பதே பொய் என்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட யூனிவர்ஸ்கள் அங்கே மிதந்துகிடப்பதால் மல்டிவெர்ஸ் என்பதுதான் சரி என்கின்றார்கள். அத்தனை மல்டிவெர்ஸ்கள் கணக்கின்றி இருந்தும் நம் பூமியில் மட்டுமே உயிரினம் வாழமுடிகின்றதென்றால் யாரோ ஒருவர் ஆரம்பத்தில் கொத்தவேலை செய்திருக்கின்றார் என்று தானே அர்த்தம்.

சிறுசுகளை பயமுறுத்தி சாப்பிடவைக்க இல்லாத பூச்சாண்டி தேவைப்பட்டான். பெருசுகளை கட்டுக்குள் வைக்க இல்லாத தெய்வம் ஒன்று தேவைப்படுகின்றது. முறுக்கிருக்கும் போது அவன் "அவன் இல்லை" என்று சொன்னாலும் தள்ளாடும் போது அவனுக்கு சந்தேகம் வந்துவிடுகின்றது.

கனவில் எவனோ ஒருவன் துப்பாக்கியிலிருந்து சுட்ட தோட்டா ஒன்று என் தொண்டையை கிழிக்க பயந்து போய் விழித்தேன். அப்படா நிஜ உலகில் இன்னும் பத்திரமாக இருக்கின்றேனே என மகிழ்ந்து கொண்டேன். ஒருவேளை நிஜ உலகில் நான் இப்படிச் சாகும் போதும் வேறெங்கோ விழிப்பேனோ? Me gone crazy?



தங்கள் கால்களால்
பறவை சிக்கிக் கொள்ளும்;
தன் நாவினால்
மனிதன் சிக்கிக் கொள்வான்
-தாமஸ் புல்லர்

Update: Link fixed - முந்தைய காஞ்சி சங்கராச்சாரியார் "தெய்வத்தின் குரல்" இங்கே தமிழில் மென் புத்தகமாக. Kanchi Sankaracharya Theivathin Kural in Tamil pdf ebook Download. Right click and Save Download