
என்னத்தான் நடக்குதுனு தெரிந்து கொள்ள FM வானொலிகளுக்கு திரும்பினாலும் சரி அல்லது செய்திகளை கேட்கலாமென்று தொலைக்காட்சி பக்கம் நுழைந்தாலும் சரி பேட்டிகளின் போது பேட்டி கொடுப்பவர் ஒரு புத்தகமாவது எழுதினவராகத்தான் இருக்கின்றார். பேட்டி தொகுப்பாளரும் இவர் இந்த புத்தகத்தை எழுதின ஆசிரியராக்கும் அவர் அந்த புத்தகத்தை எழுதின ஆத்தராக்கும் என்று பெருமையாக கூறிக்கொண்டு பேட்டியை தொடர்வதுண்டு. குழந்தைகள் நல மருத்துவர் என்றால் அவர் அத்துறையை சிறிது ஆய்ந்து அப்படியே ஒரு நூல் எழுதிவிடுகின்றார். ஊர் சுற்றுபவர் என்றால் அவர் அந்த அனுபவத்தை அப்படியே ஒரு நூலாக்கிவிடுகின்றார். கொஞ்சம் ஒருமாதிரி பட்டவர்களெல்லாம் பட்டென புத்தகம் எழுதிவிடுகின்றார்கள். அதனைத் தேடித் தேடிப் படிப்பவர்களும் இருப்பார்கள்தான் போலிருக்கின்றது. ஆங்கிலமெனில் ஆடியன்ஸ் அதிகம்.பிரயாணத்தின் போதெல்லாம் கைகளில் ஒரு புத்தகத்தை இடுக்கிக்கொண்டு அதை முடித்துவிடுவது பலரின் வழக்கமாக இருந்திருக்கின்றது. இப்போதெல்லாம் அவ்விடத்தை ஸ்மார்ட்ஃபோன்களும், MP3 பிளயர்களும், நெட்புக்குகளும் பிடித்துவிட்டன. ஆனாலும் ஆர்வமுள்ளோர் இதுமாதிரியான புத்தகங்களை ஆடியோ வடிவிலாவது, வாங்கிப் படிக்கத்தான் செய்கின்றார்கள். தமிழிலும்
audible.com-ல் ஒலிப்புத்தகங்கள் (Tamil audio MP3 books) வாங்கக்கிடைக்கின்றன.
நம்மிலும் ஒரு குறிப்பிட்ட துறையில் சிறந்தோர் அதை ஆய்ந்து நம் மொழியிலேயே புத்தகங்கள் வெளியிட்டால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் டார்கெட் ஆடியன்ஸ் சுருங்கிவிடுவதால் பணப்பை நிரம்புவதில்லை. மாகாணமொழி வெளியீடுகளில் தரம் இருப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.அதையும் வெல்ல வேண்டும்.
நண்பர் தமிழ்நெஞ்சம் அவர்கள் தன் நேரத்தை தியாகம் செய்து தான் சிறந்திருக்கும் துறையான SQL சார்ந்த தொழில் நுட்பத்தகவல்களை ”எளிய தமிழில் SQL” என்ற தலைப்பில் வழங்கி வருகின்றார்கள்.அவர் கற்றுக்கொடுக்கும் பாங்கு எல்லோரும் கற்றுக்கொள்ளும் அளவில் மிக எளிதான நடையில் அமைந்திருக்கின்றது. SQL கற்றுக்கொள்ள ஆர்வமுள்ளவர்கள் இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளலாம்.
Learn SQL in easy Tamil
நன்றி
http://www.tamilnenjam.org
தமிழில் Cascading Style Sheets கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு சிவராசா பகீரதன் அவர்கள் ”CSS ஒரு ஆரம்ப வழிகாட்டி” என்றதொரு அருமையான சிறு மென்புத்தகத்தை வெளியிட்டிருந்தார்கள்.அதை நீங்கள் கீழ்கண்ட சுட்டிகளிலிருந்து இறக்கம் செய்துகொள்ளலாம்.
Download
CSS beginners guide tamil.pdfDownload
CSS - an introduction_tamil_II.pdfநன்றி
http://www.oorodi.com
தமிழிலிருந்து ஆங்கிலம் கற்றுக்கொள்ள விரும்புவோருக்கு நண்பர் HK அருண் அவர்களின் அருமையான வலைப்பூ இதோ
http://aangilam.blogspot.com "ஒரு நல்ல நூல் ஒரு நல்ல மனிதனுக்கு நல்ல சொத்தாகும். - வில்லியம் ஹாஸ்விட்
|

"ரொமான்ஸ் ரகசியங்கள்" நூல் மென்புத்தகமாக Romance Ragasiyangal Tamil pdf ebook Download. Right click and Save.
DownloadSource
http://kricons.blogspot.com