இந்திய முகங்களை பார்க்க கடந்த முறை சிக்காகோ Devon Ave-போக வழிதவறிய போது iPhone 3G-யின் GPS ரொம்பவே உதவியாக இருந்தது. இந்த 3G வசதியை சீக்கிரத்தில் மடிக்கணிணிகளும் தன்னகத்தே கொண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சந்தைகளில் ஏற்கனவே இத்தகைய மடிக்கணிணிகள் நெட்புக்குகள் இருக்கலாம். இதனால் போகுமிடமெங்கும் அதிவேக இணைய இணைப்பு உங்கள் மடிக்கணிணியில் இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அங்கும் ஒரு சிம் கார்டு போட வேண்டி இருக்குமோ?
சென்னையில் இது போல போகுமிடமெல்லாம் இணைய இணைப்பு வேண்டுமானால் இப்போதைக்கு இரண்டு சேவைகள் உள்ளனவென நண்பர் முகம்மது இஸ்மாயில்.H, PHD தெரிவித்திருந்தார்.
ஒன்று BSNL-ன் EVDO (Evolution-Data Optimized) சேவை.மாதம் 550 ரூபாயாம். எவ்வளவு வேண்டுமானாலும் வலைமேய்ந்து கொள்ளலாம். குறைந்த பட்சவேகம் 256 Kbps-ஆகவும் அதிக பட்சவேகம் 1024Kbps ஆகவும் இருக்கும். ஒரு PCMCIA கார்டு (BSNL data card ) கொடுப்பார்கள் அல்லது USB மோடமாகவும் வாங்கிக்கொள்ளலாம்.அதை உங்கள் மடிக்கணிணியில் செருகிக் கொள்ளவேண்டும். அவ்ளோதான். இவ்வசதி பெரும்பாலான தமிழக நகரங்களிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.வேகம் தான் வித்தியாசப்படலாம். Rental அல்லது Purchase செய்யவும் வசதி கொடுத்திருக்கின்றார்கள்.
இவ்வசதிஉள்ள நகரங்களின் வரிசையை பார்க்க கீழே சொடுக்கவும்
http://bsnlevdoclub.com/bsnl-evdo-coverage/bsnl-evdo-enabled-cities-in-india/
சென்னையில் எங்கெங்கு எவ்வளவு EVDO வேகம் கிடைக்கும் என இங்கே பார்த்து அறிந்து கொள்ளலாம்.
http://chennai.bsnl.co.in/News/EVDO_BTS.htm
மேலும் விவரங்களுக்கு
http://chennai.bsnl.co.in/News/EVDO.htm
இன்னொன்று Tata Indicom-ன் Photon சேவை. மாதம் 1500 ரூபாயாம். ஒரு USB மோடம் கொடுப்பார்கள்.சென்னையில் ஒரு சில குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே இது வேலை செய்கின்றது.
http://www.tataindicom.com/HSIA-photon-usb-personal.aspx
3G சேவை எப்போது சென்னைக்கு வருகின்றதாம்?
தேர்தலுக்கு கொஞ்ச நாட்களுக்கு முன்பு பெட்ரோல் விலையை குறைத்து விலைவாசி குறைந்துவிட்டது என படம் காட்டுவது போல 3G-யையும் வெளியிட்டு ஒளிருகின்றோம் என்று சொன்னாலும் சொல்வார்கள்.
![]() தகுதியற்ற தற்பெருமை எல்லையற்ற பேராசை இந்தமூன்றும் மனிதனை நாசமாக்கிவிடும்-முகமதுநபி |
