
ஊருக்குப் போய் ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்திருந்தான் கோபால். போய் ரொம்ப நாளாகிவிட்டதால் ஆர்வமாய் விசாரித்தேன். கால்மணி நேரத்துக்கொருமுறை வீட்டிலிருந்து செல்போன் வருகின்றதாம் பத்திரமாய் இருக்கின்றாயாவென்று. பொல்லூசன் ரொம்பவாகிக்கிட்டே போகுதுடாவென்று சலித்துக்கொண்டான். தூசு மாசு ஒருபக்கமென்றால் வாகன சத்த மாசு இன்னொரு பக்கம்.சாலைகளில் இளசுகள் வீசும் விழி மாசு தான் கொதிக்கும் வெயிலில் ஒரே ஆறுதல் என்றான்.
நம் ஊரில் குடும்பத்துக்கு ஒரு கணிணி என்ற நிலை மாறி ஆளுக்கு ஒரு கணிணி என்ற நிலை வர இன்னும் சில காலம் ஆகலாம். அதுவரைக்கும் நாம் சில கட்டுப்பாடுகளை வைத்துக்கொள்ளவேண்டியுள்ளது. இரத்தக்களறி காட்டும் கம்ப்யூட்டர் வார் கேம்கள், அப்படி என்னத்தான் இருக்கின்றதுவென பார்க்க நிறுவிய ஏடாகூட வயசுவந்தோர் கேம்கள், கணக்கு வழக்குகளையெல்லாம் வைத்திருக்கும் அக்கவுண்டிங் பயன்பாடுகள் இதுபோன்றவற்றையெல்லாம் தவறியும் குழந்தைகளோ அல்லது பிறரோ ஓட்டிவிடாமல் இருக்க பாஸ்வேர்ட் போட்டுவைக்க Game Protector எனும் இலவச மென்பொருள் உதவலாம். அந்த குறிப்பிட்ட கடவுசொல்லை கொடுத்தால் மட்டுமே அந்த கேமோ அல்லது புரோகிராமோ ரன் ஆகும். தெரிந்தோ தெரியாமலோ சிறுசுகளும் குழந்தைகளும் கேம் மட்டுமல்லாமல் பிற குறிப்பிட்ட புரோகிராம்களையும் ஓட்ட விடாமல் தடுக்க இந்த gameprotector நிச்சயம் உதவும்.
Download from here
http://www.gameprotector.com/gameprotector_setup.exe
![]() அபாயகரமானது. ஒருவரையும் நம்பாமல் இருப்பது இன்னும் அபாயகரமானது - ஆப்ரகாம் லிங்கன் |
