Friday, February 22, 2008

உங்களிடமிருந்து

பக்கத்திலோடும் 279 KB அளவேயான gif படக்கோப்பு என்னமாய் நீளக் கதை சொல்லுகிறதென பாருங்கள். மிக அருமையல்லவா?. சரி.விசயத்துக்கு வருவோம்.
நண்பர் இஸ்மாயில் கனி கேட்டிருந்தார்.
ஒரு VIDEO file-லிருந்து தேவையான பகுதி மட்டும் வெட்டி எடுக்க, மற்றும் வெட்டி எடுத்த பகுதிகளையெல்லாம் ஒரு கோப்பாக செய்ய Video cutter or VCD CUTTER செயலி பற்றி அறிய தாருங்களேன்.


இலவச வீடியோ எடிட்டரான Virtual Dub -ஐ நீங்கள் முயன்று பார்த்ததுண்டா? இதனோடு ஒத்து போகும் filters-ஐ இங்கே இலவசமாய் இறக்கம் செயது கொள்ளலாம்.
http://milafat.free.fr/vdfilters.htm
மற்றபடி VCD கட்டர் தான் வேண்டுமெனில் 4shared.com-ல் தேடிப்பாருங்கள். கிடைக்கும். கீழே சுட்டி.
VCD Cutter

நண்பர் காசிபாரதி கேட்டிருந்தார்.
பிகேபி சார் மிகவும் பயனுள்ள தகவல்கள் தொடர்ந்து தருகிறீர்கள். என்னுடைய கம்ப்யூட்டரில் இருக்கிற திடீர்ன காணமுடியாம இருக்கு. ஆனால் அழிஞ்சு போகல்ல. அதை எப்படி மீட்க முடியும்? நான் இந்த கம்ப்யூட்டருக்கு புதுசு கொஞ்சம் உதவி பன்னுவிங்களா?


நீங்கள் சொல்வது புரியலையே. ஒருவேளை உங்கள் கோப்புகள் அழிபட்டிருந்தால் "அழிக்கப்பட்ட கோப்புகளை மீட்க" என்ற எனது முந்தைய பதிவை படித்து பாருங்கள்.உதவலாம்.

நண்பர் rsankar கேட்டிருந்தார்.
PKP sir I want video mixing software.I need to mix some video file and special effect also please can you help? same as pinnacle studio.please reply me sir.thank you


Wax உங்கள் தேவையை சரிகட்டுமாவென தெரியவில்லை.
http://www.debugmode.com/wax/
Pinnacle தான் வேண்டுமெனில் இங்கு தேடிப் பாருங்கள்.

நண்பர் வால்பையன் கேட்டிருந்தார்.
ஒரிஜினல் windows xp எங்கே கிடைக்கும்.ஈரோட்டில் Rs.3700 சொல்கிறார்கள், அதன் விலை அவ்வளவு தானா?


http://www.buyoriginalms.com எனும் வெப்தளம் வழி வாங்கலாமாம். அல்லது http://www.askfororiginal.comஎனும் தளம் பிற வழிகளை (தொலைபேசி வழி அல்லது கடை முகவரிகள்) சொல்லித் தருகின்றார்கள். Windows Vista Home basic பதிப்பு 7,250 ரூபாயாம். விலை கொஞ்சம் அதிகம் தான். :)

நண்பர் கயல்விழி முத்துலெட்சுமி கேட்டிருந்தார்.
N72 நோக்கியா மாடல் போன் மூலம் எடுக்கப்பட்ட வீடியோக்கள் mp4 பார்மேட்டில் இருக்கிறதே அதை சிடி செய்ய இயலவில்லை.. அதற்காக அதை வேறு பார்மாட்டில் மாத்த எதாவது சாப்ட்வேர் இருக்கிறதா? (இலவசமாக)


சூப்பர் என்ற மென்பொருள் உதவுமே, மீடியா ஸ்பெஷல் என்ற எனது முந்தைய பதிவை படித்துப் பாருங்கள்.

நண்பர் பிரேம்ஜி கேட்டிருந்தார்.
நண்பர் PKP க்கு வணக்கம். என்னிடம் 350 MB அளவில் ஒரு AVI வீடியோ உள்ளது. அதை எவ்வாறு சுருக்குவது. மேலும் அதை நான் edit செய்ய விரும்புகிறேன். தயவு செய்து விளக்கவும். நன்றி.


புரிகிறது.AVI வீடியோக்களின் சைசு பெருசு பெருசாகத்தான் இருக்கும்.அதை பிற ஃபார்மாட்டுக்கு (Like mpeg) மாற்றுவதன் மூலம் அதன் சைஸை குறைக்கலாம்.மேலே நான் சொன்ன சூப்பர் என்ற மென்பொருள் அதற்கு உதவும்.

நண்பர் Sundar கேட்டிருந்தார்.
You tube video-kkalai .flv file download seithu .mpg yaga SUPER converter-il seithu CD yil paarthaal,Quality poor-aaga irukkirathae? your suggestions please


யூடியூபில் முழுத்திரையாக அவ்வீடியோவை பார்த்தால் என்ன தரத்தில் தெரியுமோ அதே தரத்தில் தான் CD-யாக எரிக்கும் போதும் கிடைக்கின்றது. அதனால் நல்ல தரமுள்ள யூடியூப், கூகிள் வீடியோக்களையே CD-யாக சமைத்தல் நல்லது.

நண்பர் வடுவூர் குமார் கேட்டிருந்தார்.
ஆத்திச்சூடி அருமையாக இருக்கு. படைத்தவர்களுக்கு வாழ்த்துக்கள். பள்ளியில் உட்கார்ந்து பெரிய புத்தகத்தில் படிப்பது போல் இருக்கு. குரல் கொடுத்திருக்கலாமோ??


கொடுத்திருந்தார்களே!! கவனிக்கலையோ!
:)

நண்பர் thiruthiru கேட்டிருந்தார்.
பிகேபி ஐயா, தமிழ் யுனிகோட் ஏற்றுக்கொள்ளக் கூடிய freeware pdf editor கிடைக்குமா?


தமிழ் யுனிகோடில் எந்த எடிட்டரை வைத்து வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளுங்கள். நோட்பேடிலோ அல்லது மைக்ரோசாப்ட் வேர்டிலோ எழுதிக்கொள்ளுங்கள்.அக்கோப்பை எளிதாய் pdf-ஆக்க PDFcreator போன்ற மென்பொருள்கள் இலவசமாய் கிடைக்கின்றனவே.

"பிரிப்போம், சேர்ப்போம்":-ல் பிரிச்சாச்சு. பிரிச்ச கோப்பை அனுப்பும்போது மறுமுனையில் ஒட்டத் தேவையான .exe கோப்பை mail clients like gmail, hotmail, rediff, yahoo நாலுமே மறுக்கின்றனவே? என்ன வழி? ஒட்டுவான் இல்லாமல் எப்படி வெட்டிய கோப்புகள் இணையும்?

மறுமுனை நண்பருக்கு அந்த பதிவிறக்க சுட்டியை மின்னஞ்சல் வழி அனுப்பலாம். அல்லது .exe-யை சும்மாவாச்சும் .doc-னு rename பண்ணி மின்னஞ்சலில் அனுப்பலாம். ஆனால் நண்பருக்கு சரியான வழிமுறைகளை சொல்ல மறந்துடாதீங்கோ.

சுஜாதா "கணையாழியின் கடைசிபக்கங்கள்" தமிழில் மென்புத்தகம் Sujatha Kanayaliyin Kadaisi Pakangal pdf Tamil e-book Download. Right click and Save.Download