Tuesday, February 19, 2008

பிரிப்போம், சேர்ப்போம்

100 மெக் (100MB) அளவிலான வீடியோ கோப்பு ஒன்றை நண்பர் ஒருவருக்கு மின்னஞ்சல் வழி அனுப்ப விழைகின்றீர்கள் என வைத்துக் கொள்வோம். பெரும்பாலும் அது சாத்தியமாகாது. ஏனெனில் இப்போதைக்கு சத்தியமாய் அக்கோப்பின் அளவு மிகப்பெரிது. ஜிமெயில் போன்ற இலவச மின்னஞ்சல் கொடுப்போர் கூடிப்போனால் 20 மெக் (20MB) அளவிலான கோப்புகளை மின்னஞ்சல் வழி அனுப்ப அனுமதிப்பர். அதற்கும் மேல் போனால் அழகாய் "சாரி" சொல்லிவிடுவர்.

இது போன்ற சந்தர்பங்களில் கை கொடுப்பவை தான் கோப்பு பிரிப்பான்கள், சேர்ப்பான்கள். இதன் மூலம் அந்த 100மெக் கோப்பை நீங்கள் 20மெக் அளவினதாய் ஐந்து துண்டு துண்டாக்கி (Split) தனித் தனி மின்னஞ்சல்களில் நண்பருக்கு அனுப்பலாம். மறுமுனையில் நண்பர் அந்த ஐந்து மின்னஞ்சல் அட்டாச்மெண்ட்களையும் இறக்கம் செய்து கோப்பு சேர்ப்பான் மூலம் எளிதாய் ஒன்றாய் இணைத்துக்கொள்வார் (Join). அவ்ளோதான். 100 மெக் வீடியோ துண்டு மறுமுனை போய் சேர்ந்தாயிற்று.

இது போல் கோப்புகளை பிரிக்க சேர்க்க இரண்டு பிரபல இலவச மென்பொருள்கள் உள்ளன.

ஒன்று HJSplit
Download here

இன்னொன்று The File Splitter
Download here

இப்படி பிரிப்பதும் சேர்ப்பதும் இங்கு இத்தனை எளிது. மனிதர்களிடையே தான் ரொம்ப கஷ்டம் டோய்.


சுஜாதாவின் "மெரினா" குறுநாவல் இங்கே தமிழில் மென் புத்தகமாக. Sujatha Merina Novel Story in Tamil pdf ebook Download. Right click and Save.Download
Thanks Tamilnenjam.